திருமுருகன் பூண்டி ஆறுமுகர்



கோவை மாவட்டத்தில் அவி நாசிக்கு அருகிலுள்ள தலம் திருமுருகன் பூண்டியாகும். முருகன் இங்கு மாதவி வனத்தில் இருந்த லிங்கத்தை வழிபட்டுப் பேறு பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. முருகன் சிவபூஜை செய்து அருள்பெற்றதையொட்டி இங்குள்ள சிவபெருமான் முருகநாதர் என்று அழைக்கப்படுகிறார்.   இங்கு முருகன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இவர் சதாகாலமும் சிவபெருமானைப் பூஜித்துக் கொண்டிருக்கிறார்.  (இத்தலத்தில் இறைவன் சுந்தரர் பொருளைக் களவு செய்தும் அதனால் துன்புற்று அவர் கலங்கியபோது மீண்டும் அவற்றை அளித்தும் திருவிளையாடல் புரிந்தார். அதைச் சுந்தரர் தேவாரம் மூலம் அறிகிறோம்) முருகனுக்குரிய சிறந்த பிரார்த்தனைத் தலமாக இது திகழ்கிறது.