திருமகளின் திருவருள்



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

சிற்பங்கள் காட்டும் நவரசங்கள் என்ற தொகுப்பும், படங்களும் ஆத்ம சந்தோஷத்தைத் தந்தது. - ஆர்.ஆர்.உமாராமர், வாரியூர்.

‘தீபாவளி பக்தி ஸ்பெஷல்’ அட்டையில் மங்களமான லட்சுமியின் மகத்தான அருட்கோலம் வாசகர்களுக்கான  ஆசிர்வாதம் எனப் பிரகாசிக்கிறது.
- ஆர்.விநாயராமன், செல்வமருதூர். - ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஆஹா... அதி அற்புதம். தங்கப் பிரசாதமா பிரமாதம். ரத்லாம் மகாலட்சுமி கோயில் குறித்த தொகுப்பு படித்து மனம் தோப்பானது.
- ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி.

‘தீபாவளி எனும் ஞான தீபம்’ என்ற தலையங்க தலைப்பே விளக்கும் வெளிச்சமுமாகி விட்டது. தரப்பட்ட விவரங்கள் அனைத்துமே வரங்கள்தான்.
- ஆர்.ஜே.கலியாணி,  மணலிவிளை.

‘பகவத்கீதை’ தொடர் தொகுப்பில் இடர் அகற்றும் தத்துவங்கள் தாராளமாக உள்ளன. மகாலட்சுமி தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள் என்பதற்கான விளக்கம் வெகு ஜனங்களுக்கான கரிசனம் என்பதால் அந்த தொகுப்பு, மனதில் ஆசனம் போட்டு அமர்ந்துகொண்டது.
- ஆர்.ஜி.பாலன் திசையன்விளை.

தீபாவளி எனும் ஞான தீபம் என்ற ஆசிரியரின் தலையங்கம் ‘தீபாவளி’ என்ற அந்த உலகளவிலான பண்டிகையின் அருமை  பெருமைகளை, ஆன்மிகப் பின்னணியுடன் எடுத்துரைத்திருந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சமையல் சங்கதிகள் அனைத்து பத்திரிகைகளிலும் அலங்கரித்து அவாவை அதிகரிக்க வைத்தாலும் கூட ஆன்மிகப்பலனின் இடம் பெறுவதால் அவை அனைத்துமே பிரசாதங்கள் ஆகின்றன என்பதோடு தில்லி காட்டியாமாக்சர் முதல் ஸ்டஃப்டு மக்கன்பேடா வரை அடுக்கிய மிடுக்கு கொடுக்கும் போட வைத்தது.
- ஆர்.ஜி.பிரமோ, திசையன்விளை.

ஜாதகம் பார்த்து பத்து பொருத்தம் இருந்தும் மணமுடித்த பின், ஏன்? விவாகரத்து வருகிறது? என்பதற்கு ஹரிபிரசாத் சர்மா, காரண காரியங்களோடு விளக்கி கூடவே மணமகன்-மணமகளுக்கு மூன்றாம் இடமும், ஏழாம் இடமும் ஒத்து போகிறதா என்பதை பார்க்கச் சொல்லியிருந்தது பெற்றோர்கள் அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய நல்ல விசயம். பயனுள்ள தகவல்.
- ஆர்.கே.லிங்கேசன்,  மேலகிருஷ்ணன் புதூர்.

அனந்தனுக்கு 1000 நாமங்கள் பகுதி எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஒவ்வொரு நாமத்திற்கும் புராணக் கதைகளைக் கொண்டு விளக்குவதை படிக்கப் பிறந்த மனம் பரவசமடைகிறது.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

தீபாவளித் திருநாளில் திருமகளின் திவ்ய தரிசனம் தலைப்பில் பல்வேறு அற்புத திருமகள் அருள்புரிகின்ற திருக்கோயில்களைப்பற்றிய அரிய தகவல்களின் தொகுப்பு தீபாவளி மலரில் சுடர் விட்டு பிரகாசித்த அழகிய மத்தாப்பு. - அயன்புரம் த.சத்திய நாராயணன்,  சென்னை-72.
ஒன்றா இரண்டா இருபத்தாறு இடங்களில் குடிகொண்டிருக்கும் திருமகளின் இருப்பிடங்களை ஒன்று சேர படித்து அறிந்தபோது திவ்விய தரிசனத்தின் மகத்துவம் புரிந்தது.
- சிம்ம வாஹினி,  வியாசர் நகர்.

தீபாவளித் திருநாள் அன்று கண்ணன் வருவான் என்ற மீராவின் நம்பிக்கை உறுதி செய்யப்படுகிறது. கமலக்கண்ணனின் வருகையை பொன்வண்டு ரீங்காரம் செய்து, மணவானில் நற்சகுனமாக கருடன் வட்டமிட்டு, கார்மேகம் பேறு தூது சொல்லி உறுதி செய்தது.
- முனைவர்.இராம. கண்ணன், திருநெல்வேலி.

தீபாவளி எனும் ஞான ஒளி, அமைதி என்னும் தீப ஒளி ஏற்றியது. தித்திக்கும் பிரசாதங்கள் படைப்புகள் ஒவ்வொன்றும் திகட்டாத தீபாவளி பிரசாதங்கள் தெளிவு பெறுஓம் ஆன்மிக சரவெடியாய் வெடித்தது. அர்த்தமுள்ள இந்து மதம் தொடர் கல்மத்தாப்பாய் வாழ்க்கைக்கு வண்ணமயமாய் காட்டியது. அனைத்து படைப்புகளும் தீபாவளி இனிப்போடு பட்டாசு பரிசு பெட்டகத்தை வழங்கியதுபோல் அமைந்தது.
- வைரமுத்து பார்வதி, ராயபுரம், சென்னை-13.

‘ஆன்மிகம் பலன்’ தீபாவளி பக்தி ஸ்பெஷல் தித்திக்கும் தீபாவளியை எடுத்துக்கூறிய விதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது. கோதாவரி நீராடல், புவனம் முழுவதும்  நிறைந்த பேரருளே. குசேலனையும் குபேரனாக்கும் மகாலட்சுமி கோயில்கள். இப்படி அத்தனையும் தீபாவளித் திருநாளில் நெஞ்சில் நிறைந்து போனது. தொடரட்டும் ஆன்மிகம்
பலன் பணி.
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.