திருமலை குடமுழுக்கு காண கண்கோடி வேண்டும்!



திருமலை கண் விழிக்கும் முன்னே
தீர்த்தங்கள் உறக்கம் கலையும் முன்னே
பறவைகள் தொழுது இரைதேட பறக்கு
            முன்னே
மலையில் குளிரிறங்கி பனிக்காற்று வரு
                   முன்னே
பத்மாவதி துயில்நீங்கி பத்மபாதம்
                   வணங்குமுன்னே
பக்தன்யான் உன்னருளால் குடமுழுக்கு   
                   காணுவேன்!
கோவிந்தன் மனகோபுரம் குணங்

                                  கள்கலசம்
கோபுரநீர் தெளித்து குடமுழுக்கு     
                                  கோலாகலம்
காரணம் ஏதுமுண்டோ! கண்களுக்கு
                          திரைபோட
பக்திக்கு காணிக்கை வேங்கடவன்     
                                  அருளன்றோ
தித்திக்கும் திருநாமம் ஆகாயகங்கை
                                  பிரவாகம்!
ஆதிசேஷன் குடை விரிக்கும் முன்னே
சங்குசக்கரம், கருடன் சேவைக்க
                                 முன்னே
அனந்தசயனன் அருள்பெற வாசல்     
                                 நிற்பேன்
பக்தியே உயிராகும்! திருநாமம்             
                                 உணவாகும்
நிலமகள், திருமகளுடன் திருமணக்                        
                                 கோலம்
நாராயணவனமதில் நின்ற ருளும்                         
                                 தவக்கோலம்!
முக்கோடி தேவரும், முனியும், ரிஷியும்
மும்மூர்த்தியும், முப்பெரும்தேவியரும்,
                  ராமனும்சீதையும்
அனுமனும், பரசுராமனும், கண்ணனும்,
                         மன்னனும்
திருமலையில் திருவடி வைக்கும்     
                                முன்னே
திருவேங்கடவன் திருக்குடமுழுக்கை
                                காண
திருநிறைந்த செல்வபுரியில் தங்க
                                வேண்டும்!
உயிரினம் காக்கும் உத்தமன் கோவிந்தன்
பயிரினம் செழிக்க பூவினம் சிரிக்க
மயிலினம் மகிழ மெல்லினம் சிறக்க
மானுடம் தழைக்க மலையப்பன்
                                துணையாவான்
வெள்ளருவி ‘ஹரிஹரி’யென பூமி                         
                                விழுந்து
வனம்பாய்ந்து மூலிகைசேர்ந்து நோய்
                தீர்க்கும்!
திருமாலழகை உள்ளம் பருகி களிக்க
    திருமலையில் கல்லும், மண்ணும் தவ  
                               மிருக்க
தகுதியிலா எனக்கு தரிசனம் தந்தான்
தயாளன், ஏழைப்பங்காளன், ஏழுமலை
                              வாசன்
தாயாய் காத்து விருப்பம் சேர்க்கும்
தன்னிகரற்ற தெய்வத்தாள் சரண்     
                             புகுவோம்!
உறக்கமிலா மனதில் கோவிந்தன்                 
                             நினைவு
உலகெலாம் புகழும் திருவிழா நிகழ்வு
பன்னிரண்டு ஆண்டு தவமிருந்த                         
                             கண்கள்
பக்தி பரவசத்தில் கோர்த்தது கண்ணீர்
கோவிந்தன் பெயரை அணைத்து         
                             உறவாடு
குறையிலா ஆனந்தம் அனுபவித்து                         
                             கொண்டாடு!
நம்பெருமானை வணங்குவோர் எல்லா
                     முடையார்
நலமுடையார், வளமுடையார்,                 
                             கருணை மனமுடையார்
உள்ளத்தை குருடாக்கி உயரத்தில்                     
                            நின்று ரசிப்பான்
உலகை படைத்தவன் அவனே உணர்
                     வாயிதை மனமே!

- விஷ்ணுதாசன்