ஆன்மிக விருந்து!



ஆன்மிகம் ஒவ்வொரு இதழும் ’’Collectors Issue” ஆக வெளியிடுவதற்கு பாராட்டுகள். அட்டை டு அட்டை எல்லா கட்டுரைகளும் பிரமாதம். 
- என்.ஆராவமுதன், வேலூர்.

முக்கனிகளை சுவைத்த அனுபவத்தைத் தந்தது ‘‘முச்சிறப்பு பக்தி ஸ்பெஷல்.’’
- ம.அரங்கநாதன், புதுச்சத்திரம்.

வைகுண்ட ஏகாதசித் திருநாளில், நேரில் சென்று தரிசிக்க ஆவலிருப்பினும் தரிசிக்க முடியாத பெருமாளின் 108 திவ்ய தேசங்களை தரிசிக்க வைத்த தங்கள் இதழுக்கு 1008 நன்றிகள் உரித்தாகுக.
- கே.ஏ.நமச்சிவாயம், பெங்களூரு.
- இரா வளையாபதி, தோட்டக்குறிச்சி.
- கே. சிவகுமார், சீர்காழி.

விவாதம், உரையாடல் இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை துல்லியமாக விளங்கவைத்து இறைவனிடம் விவாதம் செய்யாமல் உரையாடுவதின் மூலம் பலன் பெறலாம் என்பதை பக்குவமாக உணர்த்தியது பொறுப்பாசிரியரின் தலையங்கம்.
- ப.த.தங்கவேலு. பண்ருட்டி.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி இறைவனைத் தொழுவது மட்டுமே நம் கடமை என்ற உபதேசத்தை சபரியின் தந்தை ஏற்கனவே அவளுக்கு ஊட்டியிருந்ததால்தான் அவரும் ஆன்மிகத்தில் பக்குவப்பட்டிருப்பதை ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு இலந்தைப்பழம் கொடுத்ததை வைத்து உறுதி செய்ய முடிகிறது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

விபூதி எனும் வியத்தகு மருந்து செய்தி படித்து வியந்தே போனேன். அதன் மகிமையைப் பற்றி புரிந்து கொண்டேன்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

ராமானுஜர் 1000 கட்டுரைத் தொகுப்பு எம்பெருமானார் ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு விழாவிற்கு ரத்தின மகுடமாய் மின்னியது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அட்டை முதல் சூப்பர். தெளிவு பெறுஓம், 108 திவ்ய தேசங்கள் தரிசனம், பொறுப்பாசிரியரின் தலையங்கம், அர்த்தமுள்ள இந்துமதம் தொடர், குறளின் குரல். மகாபாரதம், திருமூலர் திருமந்திரம், கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள், ஞானஒளி என பலப்பல சுவைகளில் ஆன்மிக விருந்து படைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.
- இரா.வைரமுத்து, ராயபுரம்.

தங்கள் இதழின் சிறப்பம்சங்களில் தெளிவு பெறுஓம் பகுதியும் முக்கியமான ஒன்றாகும். கடந்த இதழில் மழை பொய்த்துப்போனது தொடர்பான கேள்விக்கு ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த நல்ல கருத்துகளையும் நல்ல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார் ஹரிபிரசாத் சர்மா. அதை ஆலய நிர்வாகிகள் செயல் படுத்த முன்வரவேண்டும்.
- ப.த.வேலு, திருவதிகை.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வெளியாள ஆடவல்லானின் திருவுருவ அட்டைப்படம் நேர்த்தியாக இருந்தது. பகவான் ரமணரின் பொன்மொழிகள் மனதை மேம்படுத்தின. பொங்கல் பிரசாதங்களைச் செய்யும் முறை, மகளிர்க்கு வரப்ரசாதம்.
- இரா.கல்யாணசுந்தரம், வேளச்சேரி.

விவாதத்தை விடுவோம் தலையங்கம் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. பிறரால்  ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா என்ற நியாயமான சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் கலந்து கொள்வதுதான் விவாதம். உரையாடலில் அப்போதைய சுமுகமான பேச்சால் அடுத்த சந்திப்பின்போதும் நட்புமணம் வீசும்; காழ்ப்புணர்வு பேச்சால் கசப்புணர்வு ஏற்படும் என்பதை சுருக்கமாக, ஆனால் ஆழமாக விவரித்துள்ளார் பொறுப்பாசிரியர்.
- மீனாவாசன், சென்னாவரம்.

நவம்பர் 16, 2016 ஆன்மிகம் இதழில் சென்னை மடிப்பாக்கத்திலுள்ள ஐயப்பன் கோயில் பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தீர்கள். அதில் கீழ்காணுமாறு தகவல்கள் இடம் பெற்றிருந்திருக்கவேண்டும்: மடிப்பாக்கம் ஐயப்பன் கோயிலுக்கும், ஸ்ரீசர்வசித்தி விநாயகர் கோயிலுக்கும் உள்ள இடத்தை எனது தந்தை காலஞ்சென்ற E.ஆதிகேசவ பிள்ளை அவர்கள் 02-08-1976 அன்று ஒரு தானப் பத்திரம் மூலமாக ஸ்ரீஐயப்பன் மண்டலிக்கு ரிஜிஸ்டர் செய்து கொடுத்துள்ளார்.

ஐயப்பன் விக்கிரகமும் எனது தந்தையாரால் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் ஸ்ரீசர்வசித்தி விநாயகர் கோயிலை அவர் தன் சொந்த செலவிலேயே கட்டி முடித்து, பொதுமக்கள் பொருளுதவியுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் இந்த உண்மையல்லாத வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
- E.A. சேகர்.