வேலை ரெடி!*வாய்ப்பு

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

பொறியியல் பட்டதாரிகளுக்கு கணினி தொழில்நுட்பத்துறையில் வேலை

நிறுவனம்: பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சி.டி.ஏ.சி எனப்படும் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆஃப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் எனும் நிறுவனம். இந்த நிறுவனம் கணினி ஆராய்ச்சிக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது


வேலை: ப்ராஜக்ட் அசோசியேட், ப்ராஜக்ட் எஞ்சினியர் உட்பட 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 163. இதில் ப்ராஜக்ட் அசோசியேட் 46, ப்ராஜக்ட் எஞ்சினியர் 115(இதில் 4 துறைகள் உண்டு) மற்றும் ப்ராஜக்ட் மேனேஜர் 2(இதிலும் 2 துறைகள் உண்டு) காலியிடங்கள் உள்ளன

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.இ., எம்.ஃபில்., பிஎச்.டி போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: ப்ராஜக்ட் அசோசியேட் மற்றும் ப்ராஜக்ட் எஞ்சினியர் வேலைகளுக்கு 37 வயதுக்குள்ளும், ப்ராஜக்ட் மேனேஜர் வேலைக்கு 50 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.9.2019

மேலதிக தகவல்களுக்கு: www.cdac.in

தமிழக அரசில் சைல்டு டெவலப்மென்ட் ஆபிசர் பணி

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி-யின் வேலைவாய்ப்பு

வேலை: அசிஸ்டென்ட் ஆபிசர் எனும் உதவி இயக்குநர் மற்றும் சைல்டு டெவலப்மென்ட் ஆபிசர் எனும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி என இரு வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 102. இதில் முதல் வேலையில் 13, இரண்டாம் வேலையில் 89 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: முதல் வேலைக்கு ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, சோஷியாலஜி, சைல்டு டெவலப்மென்ட், ஃபுட் அண்ட் நியூட்ரிஷன், சோஷியல் ஒர்க் மற்றும் ரீஹேபிலிட்டேஷன் போன்ற படிப்புகளில் முதுகலை தேர்ச்சி. இரண்டாம் வேலைக்கு நியூட்ரிஷன், ஹோம் சயின்ஸ் மற்றும் ரூரல் சர்வீஸ் போன்றவற்றில் டிகிரி

வயது வரம்பு: 30-க்குள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.9.2019

மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

தமிழ்நாடு மருத்துவச் சேவைத்துறையில் வேலை

நிறுவனம்: டி.என்.பி.எஸ்.சி-யின் மெடிக்கல் ரெக்ரூட்மென்ட் போர்டு எனும் மருத்துவப் பணியாளர் வாரியத்தின் வேலைவாய்ப்பு

வேலை: கிரேட் 2 அடிப்படையிலான ஃபிசியோதெரபிஸ்ட் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 77

கல்வித் தகுதி: ஃபிசியோதெரபி படிப்பில் டிகிரி

வயது வரம்பு: 30-க்குள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.9.2019

மேலதிக தகவல்களுக்கு: www.mrb.tn.gov.in

ஏர் இண்டியாவில் கஸ்டமர் ஏஜென்ட் வேலை!


நிறுவனம்: ஏர் இண்டியா விமானச் சேவையில் ஒரு தொழில்நுட்பப் பிரிவான ஏர்இண்டியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

வேலை: கஸ்டமர் ஏஜென்ட், ஜூனியர் எக்சிகியூட்டிவ், அசிஸ்டென்ட் மற்றும் ஹேண்டிமேன் வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 214. இதில் கஸ்டமர் ஏஜென்ட் 100, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 8, அசிஸ்டென்ட் 6 மற்றும் ஹேண்டிமேன் 100 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: அதிகபட்ச காலியிடங்கள் உள்ள முதல் வேலையான கஸ்டமர் ஏஜென்ட் வேலைக்கு டிகிரியும், ஹேண்டிமேன் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம்

வயது வரம்பு: அதிகபட்சமான காலியிடங்கள் உள்ள இரண்டு வேலைகளுக்குமே 28 வயதுக்குள் இருத்தல்வேண்டும்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு. இந்த நேர்முகத் தேர்வுகள் 9.9.19-லிருந்து 14.9.19-க்குள் நடைபெறும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.9.2019

மேலதிக தகவல்களுக்கு: www.airindia.in

பெட்ரோலிய நிறுவனத்தில் ப்ராஜக்ட் எஞ்சினியர் பணி


நிறுவனம்: பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட்

வேலை: ப்ராஜக்ட் எஞ்சினியர், எச்.ஆர், லா ஆபிசர் உட்பட 9 துறைகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 164. இதில் ப்ராஜக்ட் எஞ்சினியர் வேலையில் மட்டுமே 63 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: ப்ராஜக்ட் எஞ்சினியர் வேலைக்கு எஞ்சினியரிங் டிகிரி படிப்பு.

வயது வரம்பு: சில வேலைகளுக்கு 28, சில வேலைகளுக்கு 30க்குள் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.9.2019

மேலதிக தகவல்களுக்கு: https://www.hindustanpetroleum.com

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி


நிறுவனம்: மத்திய பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலைக்கழகம்

வேலை: பல்வேறு நிலைகளில் பேராசிரியர் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 179. இதில் பேராசிரியர் 44, இணைப் பேராசிரியர் 68 மற்றும் உதவிப் பேராசிரியர் 67 இடங்கள் காலியாக உள்ளன. மேனேஜ்மென்ட், கணிதம், இயற்பியல், ரசாயனவியல், அப்ளைடு சயின்ஸ், ஹியூமானிட்டி, சோஷியல் சயின்சஸ், மீடியா கம்யூனிகேஷன், கல்வி, எஞ்சினியரிங் டெக்னாலஜி, சட்டம் மற்றும் கலைகள் போன்ற கல்வித் துறைகளில் பேராசிரியர் வேலை

கல்வித் தகுதி: இந்த துறைகளில் முதுகலையுடன் யு.ஜி.சி சான்றிதழ் அவசியம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.9.2019

மேலதிக தகவல்களுக்கு: www.pondiuni.edu.in

தொகுப்பு: டி.ரஞ்சித்