அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?



மொழி

Spot  the  Error-5   Usage of ‘neither… nor’


அலுவலக வேலையில் ஆழ்ந்திருந்த ரகுவை நோக்கி வந்த அகிலா,“Neither the mother nor the children was happy or were happy. Which one is applicable sir?” enquired Akila. அகிலாவைப் பார்த்த ரகு, ‘‘நல்ல கேள்வி. எங்கிருந்து இந்த மாதிரி கேள்விகளைப் பிடிக்கிறீங்க?” என்றவர், ‘‘பொதுவாகவே either… or…., அல்லது neither …. nor…, போன்றவை Correlative Conjunctions என்றழைக்கப்படுகின்றனWhen two or more subjects in the Singular are joined by or, nor, either..or., neither… nor..,, the Verb is put in the Singular. e.g., 1)
Chandru or Dayalan is to blame. 2) Either Elizabeth or Fathima was absent. 3) Neither Ganesh nor Harish was present. அய்தர் என்பதற்கு இரண்டில் ஏதாவது ஒன்று என்று பொருள். நெய்தர் என்பதற்கு இரண்டுமே இல்லை என்று பொருள். .. either/அய்தர் அல்லது ஈதர்/என்பது பாசிடிவ். neither /நெய்தர் அல்லது நீதர்/என்பது நெகட்டிவ். அய்தர் மற்றும் நெய்தர் இரண்டுமே ஒருமைதான். எனவே, வினைச்சொல்லும் ஒருமையில்தான் இருக்க வேண்டும்.

But if one of the subjects is in the Plural, the Verb must be in the Plural. The Plural subject is placed nearer the verb. மாறாக இரண்டு சப்ஜக்ட்டுகளில் ஒன்று பன்மையாக இருந்தால், வினைச்சொல்லும் பன்மையாகத்தான் இருக்க வேண்டும். அந்த ப்ளூரல் சப்ஜக்ட் வினைச்சொல்லுக்கு முன் இருக்க வேண்டும். உதாரணமாக, e.g. 1) The thief or his aides were caught. 2) Either Indhu nor her friends have come. 3) Neither Jamuna nor her friends are the culprits. The following sentences would be helpful to practice:

1. Either Kavin or Latha is to accept the truth. 2) Neither Mani nor Nalini works hard. 3. Neither he nor you are right. 4. Either you or he is correct. 5. Neither of us was there. 6. Neither he nor we were there. 7. Neither this nor that is suitable. 8. Neither this one nor those ones are suitable. 9. Either of his parents is present. 10. Either / Neither he or / nor his parents were present. சரி, இப்போதைக்கு இது போதும்’’ என்று சொல்லிய ரகு தன் பணியைத் தொடர்ந்தார்.
(மீண்டும் பேசலாம்)

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்