தமிழக வனத்துறையில் வனக் காவலர் பணி!



வாய்ப்பு

564 பேருக்கு வாய்ப்பு!


தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள் 564 (Forest Watcher) நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனத்தில் பத்தாம் வகுப்பு, +2 அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைன் மூலமே ரூ.150 + சேவைக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மூன்று மாதத்திற்குள் எடுக்கப்பட்ட (4.5cm x 3.5cm JPG/JPEG Format of size 20-50 KB), கையெழுத்து (பெரிய எழுத்தில் இருக்கக்கூடாது (JPG/JPEG Format of size 10-20 KB), சாதிச்சான்றிதழ் (50-500 KB PDF File) ஆன்லைனில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் கையால் எழுதப்பட்ட உறுதிமொழி கடிதம் ஒன்றையும் (50-500 KB PDF File) பதிவேற்றம் செய்ய வேண்டும். உறுதிமொழி கடிதத்தில், ‘இந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை. இந்த விண்ணப்பத்தை பொறுத்தவரை எதுவும் மறைக்கப்படவில்லை. தேர்வுக்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு அல்லது உண்மைக்கு புறம்பானது அல்லது தகுதியின்மை என அறியும்பட்சத்தில் எனது விண்ணப்பம் தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நிராகரிக்கப்படும் என்பதற்கு உடன்படுகிறேன்’ என்று எழுதி கையொப்பமிட்டு ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

இந்தப் பணிக்கான அறிக்கை வெளியான 7.3.2019ம் தேதிக்கு முன் உள்ள ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட தகுதியான விளையாட்டுச் சான்றிதழ் இருந்தால் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10.8.2019.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.forests.tn.gov.in அல்லது https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.