அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!மொழி

Alliteration, Assonance, Pun, Oxymoron and Paradox Group IV (Part 5)

ஆங்கிலத்தில் எப்போதும் சந்தேகங்களோடு வரும் ரவிக்கு பாடம் எடுத்தார் ரகு. “அதாவது ரவி, Deep desire is the discipline that drives David to destiny என்பது ஒரு Alliteration அதாவது repetition of a Consonant sound in a sentence. ஒரு வாக்கியத்தில் உயிர்மெய் (Consonant) ஒலி திரும்பத் திரும்ப ஒலிக்குமாறு இருந்தால் அது Alliteration /அலிட்ரெய்ஷன்/ ஆகும்.

இதற்கு உதாரணமாக சொல்வதென்றால், Peter Piper picked up a peck of pickled peppers. அது மட்டுமல்ல. She sells sea shells in the sea shore. இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தில ரஜினிகாந்த் பேசுற மாதிரி ஒரு வசனம் வரும். Betty bought a bit of butter. The butter was bitter. To make the bitter butter better butter, she bought some better butter. இதுவும் அலிட்ரெஷன்தான். அதே Vowel Sound (உயிரொலி) ரிபீட்டா வந்தா it is Assonance. For example, Emile entered into an exclusive entity for easy English” என்றார்.

மேலும் தொடர்ந்த ரகு, “இந்த ஆஸனன்ஸ் (Assonance)ல உயிரொலிகள் (Sounds of Vowels)  வார்த்தைகளின் முதலில்தான் வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது. உதாரணமாக, The rain in Spain mainly falls in plains. இதில் ai என்ற உயிர்மெய்யொலி வார்த்தைகளுக்கிடையே வந்துள்ளது. இது எப்டி இருக்கு?” என்ற ரகுவிடம், “Awesome and அட்டகாசம், அற்புதம் அய்யா” என்ற ரவி “pun என்றால் என்ன?” என்றும் கேட்டான்.

“மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் கருவாட்டை கைதவறி சாம்பார்ல போட்டுட்டு அவஸ்தைப் படுவார். ஒருத்தர் ‘சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனை பிடிக்கணும்’ என்பார். இரண்டு பேர் பேசிகிட்டே போவாங்க. ஒருத்தர் what do you mean? (என்ன சொல்ல வருகிறாய்?) என்பார். அடுத்தவர் I mean what I mean (சரியாத்தான் சொல்றேன்.

வேற ஏதும் அர்த்தம் இல்லை) என்பார். அடுத்தவர் But you cannot be so mean (ஆனா அதுக்காக நீ இவ்வளவு கஞ்சத்தனமா இருக்கக்கூடாது)” என்பார். உடனே ஆங்கிலம் தெரியாத கமல், ‘என்னது… எல்லாரும் மீன் மீன்ங்கறா?’ என்பார். அதற்கு டெல்லி கணேஷ், ‘அவா இங்கிலீஷ் மீனைச் சொல்றா’ என்பார். “mean” என்பதற்கு பொருள், உணர்த்துதல், கஞ்சத்தனம் போன்ற பல பொருள் உண்டு. இதுபோன்ற வார்த்தை விளையாட்டைத்தான் pun என்று ஆங்கிலத்தில் கூறுவர்” என்றார்.

“அடுத்து oxymoron என்பது நேர்எதிர் பொருள் கொண்ட இணைச்சொற்கள். (A figure of speech in which apparently contradictory terms appear in conjunction.) தமிழில் ‘முரண்தொடை’. தமிழில் கூட ‘அழகிய அசுரன்’, ‘சுகமான சுமைகள்’ என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆங்கிலத்தில் clearly confusing (தெளிவாய்க் குழப்புதல்), exact estimate, act naturally, fully empty, pretty ugly, only choice, original copy, open secret, liquid gas, happily married எனப் பல உண்டு.

அடுத்து paradox. இதுவும் ஒரு வகை முரண்பாடுதான். (A person or thing that combines contradictory features or qualities). உதாரணத்திற்கு, Nothing is written here. என்று ஒரு போர்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். இது ஒரு paradox தான் புரிகிறதா?” என்று கேட்டுவிட்டு மீண்டும் தன் அலுவலகப் பணியில் ஆழ்ந்தார் ரகு.                    

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்