வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

எஞ்சினியரிங் படிப்புகளுக்கு தாது வள நிறுவன வேலை!

நிறுவனம்: நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் எனும் மத்திய அரசின் தாதுவள வளர்ச்சி நிறுவனம்.
வேலை: ஜூனியர் ஆபீஸர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வேலை. இந்த இரண்டு பிரிவின் கீழும் பல்வேறு உப துறைகள் உண்டு.
காலியிடங்கள்: மொத்தம் 87கல்வித்தகுதி: துறைகளுக்கு ஏற்ப படிப்பு அவசியம்.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் படிப்புகளில் டிப்ளமோ, மைனிங் படிப்பில் டிகிரி மற்றும் எம்.எஸ்சி, எம்.டெக் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளில் ஏதாவது ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: ஜூனியர் ஆபீஸர் வேலைகளுக்கு அதிக பட்ச வயது 35, மேனேஜிங் வேலை களுக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தேர்வுமுறை: எழுத்து, தொழில் திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.nmdc.co.in

இந்திய ராணுவத்தில் டிரேட்ஸ்மேன் பணி!

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: டிரேட்ஸ்மேன், மெட்டீரியல் அசிஸ்டென்ட் மற்றும் இன்னும் சில பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 125. இதில் டிரேட்ஸ்மேன் மேட் வேலையில் மட்டும் அதிகபட்சமாக 102 காலியிடங்கள் உள்ளன. மெட்டீரியல் அசிஸ்டென்ட் வேலையில் 8 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிரேட்ஸ்மேன் வேலைக்கு 10வது  படிப்பு போதுமானது. மெட்டீரியல் தொடர்பான வேலைக்கு டிகிரியோ அல்லது மெட்டீரியல் மேனேஜ்மென்ட் படிப்பில் டிப்ளமோ அல்லது எஞ்சினியரிங் துறையில் ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ படிப்பு அவசியம்.
வயது வரம்பு: டிரேட்ஸ்மேன் வேலைக்கு 18 முதல் 25ம், மெட்டீரியல் அசிஸ்டென்ட் வேலைக்கு 18 முதல் 27 வயதும் அவசியம். சில பிரிவினருக்கு இந்த வயது வரம்பில் தளர்ச்சி உண்டு.
தேர்வு முறை: எழுத்துத்திறன் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.2.18
மேலதிக தகவல்களுக்கு: http://joinindianarmy.nic.in

ஸ்டேட் பேங்கில் சிறப்பு அதிகாரி பணி!

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: சிறப்பு அதிகாரிகள் எனும் பிரிவில்
22 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 121. இதில் கிரெடிட் அனாலிஸ்ட் மேனேஜர் வேலையில் 25, சீஃப் மேனேஜர் 30 மற்றும் பிசினஸ் டெவலப்மென்ட் அண்ட் மார்க்கெட்டிங்  மேனேஜர் வேலையில் 20 என அதிகபட்சமான இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: மேற்சொன்ன வேலைகள் மூன்றுக்குமே எம்.பி.ஏ, பி.ஜி.டி.எம் மற்றும் சி.ஏ. படிப்பில் தேர்ச்சிவேண்டும்.
வயது வரம்பு: மேனேஜர் வேலைகளுக்கு 25 முதல் 35 வரை, சீஃப் மேனேஜர் வேலைக்கு 25 முதல் 38க்குள் இருக்கவேண்டும்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in

சிவில் எஞ்சினியரிங் படிப்புக்கு நெடுஞ்சாலைத் துறை வேலை

நிறுவனம்: என்.எச்.ஏ.ஐ. எனப்படும் மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கான ஆணையத்தில் வேலை
வேலை: டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர், மேனேஜர் (டெக்னிக்கல்) எனும் இரு பிரிவு களில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 223. இதில் முதல் பிரிவில் 131, இரண்டாம் பிரிவில் 92 இடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி: சிவில் எஞ்சினியரிங் தேர்ச்சி
வயது வரம்பு: 20 -35
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.nhai.gov.in

எஞ்சினியரிங் படிப்புக்கு ராணுவத்தில் வேலை

நிறுவனம்: ஓ.டி.ஏ எனப்படும் ஆஃபிசர்ஸ் டிரெயிங் அகாடமியில் பயிற்சியுடன்கூடிய வேலை. பயிற்சிக்குப் பின் இந்த வேலைகள் வழங்கப்படும். ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்
வேலை: டெக்னிக்கல் பிரிவுகளில் இந்திய ராணுவத்தில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 191. சிவில், மெக்கானிக்கல் உட்பட 9 டெக்னிக்கல் பிரிவுகளில் வேலை
கல்வித்தகுதி: எஞ்சினியரிங் டிகிரி
வயது வரம்பு: 20 முதல் 27 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.indianarmy.nic.in

+2 படிப்புக்கு முப்படையில் வேலை!

நிறுவனம்: யூ.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: +2 படித்தவர்களுக்கு பயிற்சிக்குப் பின் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை எனும் முப்படைகளில் வேலைகளை வழங்கும் தேர்வு. இரண்டு வெவ்வேறு தேர்வுகள் மூலம் இந்த வேலைகளுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒன்று நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி, இரண்டு இண்டியன் நேவல் அகாடமி
காலியிடங்கள்: முதல் தேர்வில் 360, இரண்டாவது தேர்வில் 55 இடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி: +2-ல் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2.7.1999 முதல் 1.7.2002க்குள் பிறந்தவர்கள்
தேர்வு முறை: எழுத்து, உளவியல்திறன் தேர்வு, நுண்ணறிதிறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, மற்றும் நேர்முகம்.
உடல் தகுதி: குறைந்தபட்ச உயரம் 152 செ.மீ. எடை மற்றும் கண்பார்வையும் சோதிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.upsconline.nic.in

இண்டியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனம்.
வேலை: ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஜூனியர் சார்ஜ்மேன்
காலியிடங்கள்: மொத்தம் 98. இதில் முதல் பிரிவில் 97, இரண்டாம் பிரிவில் 1 இடம் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு எஞ்சினியரிங் படிப்பில் 3 வருட டிப்ளமோ படிப்பு, இரண்டாம் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 26 வரை
தேர்வு முறை: எழுத்து, தொழில்திறன் சோதனை மற்றும் உடல்திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com