புள்ளியியல் பட்டப்படிப்புகள்!



 நுழைவுத் தேர்வு

நுழைவுத் தேர்வுக்கு தயாராகுங்க!


கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு ‘இண்டியன் ஸ்டேட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்’ செயல்பட்டு வருகிறது. ெடல்லி, பெங்களூரு, சென்னை, தேஷ்பூர் ஆகிய இடங்களில் மையங்களையும், கோயம்புத்தூர், மும்பை, புனே ஆகிய இடங்களில் அமைப்புகளையும் கொண்டுள்ளது.

கொல்கத்தாவில் இயங்கி வரும் ‘இண்டியன் ஸ்டேட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்’ கணிதம், குவான்டிடேட்டிவ் எக்கனாமிக்ஸ், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான கல்வியை வழங்குகிறது. இந்நிறுவனம் புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம், புள்ளியியல் தரக்கட்டுப்பாடு, ஆப்பரேசன் ரிசர்ஜ் ஆகிய பாடங்களில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.

என்ன படிப்புகள்? எங்கு உள்ளது? எத்தனை இடங்கள்? என்ற பட்டியலைப் பார்ப்போம்

விண்ணப்பிக்கத் தகுதி, தேர்வு செய்யும் முறை

1. இளநிலை புள்ளியியல் (ஹானர்ஸ்) மற்றும் இளநிலை கணிதம்: +2-ல் கணிதம், ஆங்கிலம் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் சேர, மாணவர்கள் +2 தரத்தில் கணிதத்தில் ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ மற்றும் ‘விவரமான விடையளிக்கும்’ இரு தேர்வுகளை எழுத வேண்டும். இத்தேர்வுகள் இன்டர்நேஷனல் ஒலிம்பியார் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இல்லை.

  2. முதுநிலை புள்ளியியல் படிப்பு: புள்ளியியல் பாடத்தில் மூன்று வருட பட்டப்படிப்பு, பி.இ. அல்லது பி.டெக். அல்லது  இந்தியன் புள்ளியியல் இன்ஸ்டிடியூசனில் கணிதப் பட்டப்படிப்பு அல்லது இதே நிறுவனம் வழங்கும் ஸ்டேட்டிஸ்டிக்கல் அண்ட் அனாலிஸ் முதுநிலைப் பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்பில் சேர கணிதம், புள்ளியியல், காம்பிரிஹென்சன் ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு தரத்தில் ‘சரியான விடையைத் தேர்வு செய்தல்’ முறையிலும், ‘விவரமான விடை அளிக்கும்’ முறையிலும் இரு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

3. முதுநிலை கணிதப் படிப்பு: மூன்று ஆண்டு கணித பட்டப்படிப்பு அல்லது கணிதத்துடன் கூடிய பி.இ, பி.டெக் அல்லது இண்டியன் ஸ்டேட்டிஸ்டிக்கில் இன்ஸ்டிடியூட் வழங்கிய பி.ஸ்டேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இண்டியன் புள்ளியியல் இன்ஸ்டிடியூட்டில் கணிதம் - ஹானர்ஸ் முடித்தவர்கள் நேரடியாக நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்றவர்கள் எழுத்துத் தேர்வையும், நேர்முகத்தேர்வையும் எதிர்கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வின் முதல் பகுதியில் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான கணித வினாக்களும், இரண்டாம் பகுதியில் கணிதத்தில் குறுகிய வினாக்களும் இருக்கும்.

4. குவான்டிடேட்டிவ் எக்கனாமிக்ஸ் முதுநிலை அறிவியல் (MS - QE): +2-ல் கணிதம் எடுத்திருந்து, ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்பிற்கு மாணவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பொருளாதாரம், கணிதப் பாடங்களில் ‘சரியான விடையைத் தேர்வு’ செய்யும் வினாக்கள் இருக்கும்.

5. குவாலிட்டி மேனேஜ்மென்ட் சயின்ஸ் (MS-QMS) முதுநிலைப்பட்டம்: கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ/பி.டெக். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்பிற்கு மாணவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.எழுத்துத் தேர்வில் இளநிலை தரத்தில் கணிதத்தில் ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ அல்லது ‘விரிவான விடை தரும்’ வினாக்கள் இருக்கும்.

5. லைப்ரரி அண்ட் இன்ஃபர்மேசன் சயின்ஸ் முதுநிலை அறிவியல் (MS.LIS): ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப்
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பிற்கு மாணவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் வழியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

6. கணினி அறிவியல் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech CS): கணிதம்/புவியியல்/இயற்பியல்/ எதிர்மின் அணு அறிவியல்/ கணினி அறிவியல்/ கணினி பிரதியீடுகள்/ செய்தித் தொழில்நுட்பம் என்ற ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் அல்லது பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்பிற்கு மாணவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில், இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதியில் இளநிலை தரத்தில் கணிதத்தில் ‘சரியான விடையைத் தேர்வு’ செய்யும் வினாக்கள் இருக்கும். இரண்டாம் பகுதி விரிவான விடை தரவேண்டிய பகுதியாகும்.இதன் குரூப் A-யில் இளநிலை தரத்தில் கணிதம், லாஜிக்கல் ரீசனிங் இவற்றில் வினாக்கள் இருக்கும்.

குரூப் B-யில் சம மதிப்பெண்களோடு 5 பிரிவுகள் உண்டு. இவற்றில் கணிதம், புள்ளியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் முதுநிலை தரத்தில் வினாக்கள் கேட்கப்படும். பி.டெக். தரத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எஞ்சினியரிங், டெக்னாலஜி பாடங்களில் வினாக்கள் இருக்கும். மாணவர்கள் ஏதேனும் ஒரு பிரிவிற்கு விடை தரவேண்டும்.கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை.

7. கிரிப்டாலஜி, செக்யூரிட்டி எம்.டெக் (M.Tech Cry): கணினியில் எம்.டெக் தேர்வு பெற்றிருக்க வேண்டும். M.Tech (CS) போன்றே தேர்வு இருக்கும்.
எம்.டெக் - குவாலிட்டி, ரிலையபிலிட்டி, ஆபரேசன் ரிசர்ஜ் (M.Tech & Ror) படிக்க +2ல் இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்திருந்து, முதுநிலையில் புள்ளியியல் அல்லது இயற்பியல், வேதியியல் படித்திருந்து, இளநிலை அல்லது முதுநிலையில் புள்ளியியல் எடுத்திருந்து, எம்.எஸ்.கணிதம் அல்லது பி.இ.,பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்பில் புள்ளியியல், பொறியியல் என்று இரண்டு படிப்புகள் உள்ளன.மாணவர்கள் எழுத்துத்தேர்வு, மற்றும் நேர்முகத்தேர்வு வழியாகத் தேர்வு
செய்யப்படுவார்கள்.இதற்கான நுழைவுத்தேர்வு காலை, மாலை என்று இருவேளைகளில் நடைபெறும். காலையில் நடைபெறும் தேர்வில், கணிதத்தில் ‘சரியான விடையைத் தேர்வு’ செய்யும் முறையிலான வினாக்கள் இருக்கும். மாலையில் நடைபெறும் தேர்வில் விவரமாக விடையளிக்கும் வினாக்கள் இருக்கும்.

புள்ளியியல் படிப்பிற்கான தேர்வில் புள்ளியியல், நிகழ்தகவு இவற்றில் வினாக்கள் இருக்கும்.பொறியியல் பிரிவில், கணிதம், வெப்ப இயக்கவியல், பொறியியல் எந்திரவியல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எஞ்சினியரிங் டிராயிங் இவற்றிலிருந்து வினாக்கள் இருக்கும்.

8. ஸ்டேட்டிஸ்டிக்கல் மெத்தட், அனாலிட் டிக்கல் முதுநிலைப் பட்டயம்: கணிதத்துடன் கூடிய இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது
பி.இ, பி.டெக், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் அடிப்படைக் கணிதத்தில், ‘சரியான விடையைத் தரும்’ வினாக்கள் இருக்கும்.

9. கணினியில் முதுநிலைப் பட்டயம்: கணிதம் பாடமாக உள்ள பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத்தேர்வில் அடிப்படைக் கணிதத்தில், ‘சரியான விடையைத் தேர்வு’ செய்யும் முறையிலான வினாக்கள் இருக்கும்.

10. பிஸினஸ் அனாலிஸ் படிப்பில் முதுநிலைப் பட்டயம்: இளநிலை, முதுநிலைப் படிப்பில் 60% எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான மாணவர்கள் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வில் வெர்பல் எபிலிட்டி, லாஜிக்கல் ரீசனிங், டேட்டா இன்டர்பிரெட்டேசன், டேட்டா விசுவலிசேசன் இவற்றில் வினாக்கள் இருக்கும்.

11. புள்ளியியல், கணிதம், குவான்டிடேட்டிவ் எக்கனாமிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், குவாலிட்டி, ரிலையபிலிட்டி, ஆப்பரேசன் ரிசர்ஜ் என்ற பாடங்
களில் ஜுனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (JRF): புள்ளியியலில் எம்.ஸ்டேட், எம்.ஏ, எம்.எஸ்சி அல்லது எம்.ஏ. அல்லது எம்.எஸ்சி, கணிதத்தில் எம்.மேத்ஸ், எம்.ஏ., எம்.எஸ்சி, அல்லது எம்.இ., எம்.டெக் அல்லது குவான்டிடேட்டிவ் எக்கனாமிக்ஸ், எம்.ஏ. கணிதம், புள்ளியிலில் முதுநிலைப் படிப்பு, கணினி அறிவியலில் எம்.இ. எம்.டெக், எம்.எஸ்சி, எம்.சி.ஏ படித்திருக்க வேண்டும்.

குவாலிட்டி, ரிலையபிலிட்டி, ஆப்பரேசன் ரிசர்ஜ் முதுநிலை அறிவியல் அல்லது பொறியியல் படித்திருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.isical.ac.in/admission என்ற இணையத்தளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர்க்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி.-நான்-கிரிமி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500. விண்ணப்பக் கட்டணத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா வெப்சைட், நெட்பேங்கிங், டெபிட், கிரெடிட் கார்டு வழியாக செலுத்தலாம்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.3.2018
பணம் செலுத்த: 9.2.2018 முதல் 11.3.2018 வரை.
அட்மிட் கார்டு: 11.4.2018 அன்று பெறலாம்.
தேர்வுநாள்: 13.5.2018