வேலை ரெடி! வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் வேலை

நிறுவனம்: மஸகான் டாக் ஷிப் பில்டிங்
லிமிடெட்(மும்பை)
வேலை: 1. சீஃப் மேனேஜர் 2. சீனியர் எஞ்சினியர்
காலியிடங்கள்: 61. இதில் சீஃப் மேனேஜர் (நேவல் ஆஃபிசர்) - 5, சீஃப் மேனேஜர் -1, சீனியர்
எஞ்சினியர் (முன்னாள் கப்பற்படை வீரர்கள்) - 24,
சீனியர் எஞ்சினியர் (கேட் தேர்வு)- 31 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிகிரி
வயது வரம்பு: 30 - 46
தேர்வு முறை: கேட் தேர்வு, நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.1.2017
மேலதிக தகவல்களுக்கு: www.mazagondock.gov.in

தமிழ்நாடு மத்தியப் பல்கலையில் பேராசிரியர் பணி

நிறுவனம்: சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடு(திருவாரூர்)
வேலை: பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்
காலியிடங்கள்: 97. பேராசியர் வேலையில் 15, இணைப் பேராசிரியர் 33, உதவிப் பேராசிரியர் 49 காலியிடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: பிஹெச்.டி படிப்பு
வயது வரம்பு: 18. சில பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு
தேர்வுமுறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.1.2017
மேலதிக தகவல்களுக்கு: www.cutn.ac.in

கனிமத்துறையில் சீனியர் மேனேஜர் பணி

நிறுவனம்: மினரல் எக்ஸ்ப்ளொரேஷன் ஆஃப் இந்தியா(நாக்பூர்)
வேலை: சீனியர் மேனேஜர், அசிஸ்டென்ட் மேனேஜர், மேனேஜர் உட்பட 23 துறைகளில் வேலை
காலியிடங்கள்: 186
கல்வித்தகுதி: பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்.டெக், பி.ஜி. படிப்பு.
வயது வரம்பு: 30-45. சில பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு
தேர்வு முறை: நேர்முகம் மற்றும் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.1. 2017
மேலதிக தகவல்களுக்கு: www.mecl.gov.in

எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி

நிறுவனம்: எய்ம்ஸ்(உத்தராகாண்ட், ரிஷிகேஷ் கிளை)
வேலை: பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் எனும் 4 ஆசிரியர் துறையில் உள்ள பல்வேறு பாடத்துறைகளில் பணி
காலியிடங்கள்: 127
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்
வயது வரம்பு: 50. சில பிரிவினருக்கு வயதில் தளர்வு உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.1.2017
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsrishikesh.edu.in

அரசு காகித நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: டி.என்.பி.எல்
வேலை: ஆஃபிசர் எனும் பிரிவிலும், செமி ஸ்கில்டு எனும் திறன் சார்ந்த பிரிவிலும் வேலை(இதில் லேப் டெக்னீசியன் வேலையும் உள்ளது)
காலியிடங்கள்: 55
கல்வித்தகுதி: முதல்
பிரிவுக்கு சி.ஏ (அ) ஐ.சி.டபிள்.ஐ படிப்பும், இரண்டாவது பிரிவில் உள்ள செமி ஸ்கில்டு வேலைக்கு 10வது படிப்புடன் துறைசார்ந்து தொழிற்கல்வியில் சான்றிதழும் அவசியம். இரண்டாம் பிரிவில் உள்ள லேப் டெக்னீஷியன் வேலைக்கு எம்.எஸ்சி கெமிஸ்ட்ரி படிப்பும், துறை சார்ந்து டிப்ளமோ படிப்பும் அவசியம்.
வயது வரம்பு: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே வயது வரம்பு உள்ளது.
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.1.2017
மேலதிக தகவல்களுக்கு: www.tnpl.com

10வது படிப்புக்கு நிலக்கரிச் சுரங்க வேலை

நிறுவனம்: நார்த்தன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்(சிங்ரோலி)
வேலை: 1. ஜூனியர் ஸ்டெனோ(ராஜபாஷை துறை), 2. ஜூனியர் ஸ்டெனோ(ஆங்கிலத் துறை) 3. எலக்ட்ரீசியன் 4. எலக்ட்ரீசியன் டிரெயினி.
காலியிடங்கள்: 201. இதில் முதல் துறையில் 11, இரண்டாம் துறையில் 18, மூன்றாம் துறையில் 13 மற்றும் நான்காம் துறையில் 159 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: 10வது படிப்பு அடிப்படை. கூடுதலாக முதல் வேலைக்கு இந்தியில் தட்டச்சு  திறனும், இரண்டாம் வேலைக்கு ஆங்கிலத் தட்டச்சும், மூன்றாம் வேலைக்கு எலக்ட்
ரீசியன் துறையில் ஐ.டி.ஐ. படிப்பும், நான்காம் வேலைக்கு ஃபிட்டர், டீசல் மற்றும் மெக்கானிக் துறைகளில் ஐ.டி.ஐ. படிப்பும் தேவை.
வயது வரம்பு: 18-35
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.1.2017
மேலதிக தகவல்களுக்கு: http://nclcil.in

பட்டதாரிகளுக்கு விமான நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
வேலை: செக்யூரிட்டி ஏஜெண்ட்
காலியிடங்கள்: 107
கல்வித்தகுதி: டிகிரி (அ) avses சான்றிதழ், ஸ்கிரீனர் சான்றிதழ் படிப்பு
வயது வரம்பு: 28 - 33
தேர்வு முறை: நேரடி நேர்முகத் தேர்வு. 5.1.2017, 6.1.2017 ஆகிய தேதிகளில் காலை 7 - 11 மணி வரை
 மேலும் தகவல்களுக்கு: www.airindia.in

தொகுப்பு: டி.ரஞ்சித்