அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்பு!அறிவிப்பு

டிப்ளமோ எஞ்சினியர்கள் விண்ணப்பிக்கலாம்!


அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(எம்.ஐ.டி.) ஆகியவற்றில் பகுதி நேர பி.இ., பி.டெக். (சுயநிதி) படிப்புகள் வழங்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 இதில் சேர விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் டிப்ளமோ படிப்பை முழு நேரமாகவோ, லேட்டரல் என்ட்ரி மூலமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ படித்திருக்க வேண்டும். அதே சமயம் தொலைதூரக் கல்வியில் டிப்ளமோ முடித்திருந்தால் அவர்கள் இதில் சேர இயலாது.

மேலும் அவர்களுக்குக்  குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். வயது வரம்பு எதுவும் கிடையாது. தற்போது பணியாற்றி வரும் இடத்துக்கும் படிக்கவுள்ள இடத்துக்கும் இடையேயான தூரம் 120 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். பொறியியல் டிப்ளோமா மதிப்பெண் (75) பணி அனுபவம் (25) அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

இந்தப் படிப்புக்கான கால அளவு மூன்றரை ஆண்டுகளாகும். இது 7 செமஸ்டர்களைக் கொண்டது. இதற்கான வகுப்புகள் வேலைநாட்களில் தினமும் மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை (3 மணி நேரம்) நடைபெறும். கிண்டி பொறியியல் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், மானுஃபேக்சரிங் எஞ்சினியரிங், இன்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு எஞ்சினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பிரின்டிங் டெக்னாலஜி ஆகியவற்றில் இளநிலைப் பட்டம் படிக்கலாம்.

அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் கெமிக்கல், டெக்ஸ்டைல், லெதர் டெக்னாலஜி ஆகிய படிப்புகளில் இளநிலைப் பட்டம் படிக்கலாம். எம்.ஐ.டி.யில் மெக்கானிக்கல், புரடக்‌ஷன், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு எஞ்சினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவு களில் இளநிலைப் பட்டம் படிக்கலாம்.  பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்புவோர் (www.annauniv.edu/bept/2016 < http://www.annauniv.edu/bept/2016 என்ற இணையதளம் மூலமாக 4.1.2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

- எம்.நாகமணி