சரியான வழிகாட்டும் சங்கப்பலகை!



வாசகர் கடிதம்

+2 உயிரியல் வினாத் தொகுப்பு மற்றும் சென்டம் வாங்க சூப்பர் டிப்ஸ் நேர்த்தியான தயாரிப்பு. நல்ல விஷயம் 4 அனைவருக்கும் பயனுள்ள செய்திகளோடு குறைவில்லாத விறுவிறுப்பு.
- கே.ராகவன், சென்னை-33
   
சென்னைப் பல்கலையின் ஆன்லைன் தேர்வு முயற்சியை ஆரத்தியோடு வரவேற்கலாம். தேர்வு எழுதியவுடன் மார்க் பார்த்துவிடுவது பிளஸ் பாயின்ட்தானே!
 - எஸ்.கிருத்திகா சுரேஷ், திருப்பூர்.
  
அங்கீகாரத்தைப் பெற்று தன்னைப் பாராட்டிக்கொள்வது, 3 ஏ மந்திரங்கள், மனதில் எழும் அவசிய கேள்விகள் என ஈகோவை 3டியில் விளக்கும் நிவாஸ் பிரபுவின் உளவியல் உண்மைகளின் வெளிப்பாடு அபாரம்.
- கு.மா. சிவராஜ், புதுச்சேரி.
   
சென்னை ஐஐடியில் 5 ஆண்டு எம்.ஏ. படிப்பு, ஆஸ்திரேலிய கல்விச்சுற்றுலா தகவல்கள் என உயர்கல்விக்கு வழிகாட்டும்  செய்திகளால் ‘கல்வி வேலைவழிகாட்டி’ இதழ் வாழ்வுக்கும் வழிகாட்டியாய் மிளிர்கிறது.
- ஆர்.பாஸ்கரன்தம்பி, பெங்களூரு
   
கடற்படை செயிலர் பணி குறித்த துல்லிய தகவல்கள் அக்மார்க் தரம். கேம்பஸ் நியூசின் அப்டேட் செய்திகள், வேலை ரெடி! பகுதியின் வேலைவாய்ப்புச் செய்திகள் கல்வி வேலை வாய்ப்பிற்குச் சரியான வழிகாட்டும் சங்கப்பலகை.
- மு.ஸ்ரீரங்கன், கோவை.
 
ஏற்றுமதியாளர் சங்கம் குறித்த அவசிய தகவல்களைக் கூறிய தகவல்பலகை தொழில்முனைவோர் கடல் கடந்தும் வாணிபம் செய்ய உதவும் படகுத்துடுப்பு.
  - என்.ஞானமணி, திருச்செந்தூர்.