மாம்பழச் சாற்றில் தேன் ஊற்றி....



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

“இன்னொருத்தரோட வயித்தெரிச்சலை கொட்டிக்க மாட்டேன். எனக்குரிய வாய்ப்புகள் எனக்கு கிடைக்கும்”னு சொல்கிற நல்ல மனசுக்காரராக இருக்கிறார் இயக்குநர் வி.பிரபாகர். அவரும் பெரும் சிகரங்களை தமிழ் சினிமாவில் எட்டவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

‘ஒரு குப்பைக்கதை’ என்று தலைப்பு வைத்துவிட்டு, தரமான படமெடுத்திருக்கிறார்கள். சின்ன படம்தானே என்கிற அலட்சியமின்றி அதை மிகச்சிறப்பாக விரிவாக விமர்சித்ததற்கு நன்றி.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நடுப்பக்க தேவயானி ஷர்மாவின் வண்ணப் படத்துக்கு விடுகதை பாணியில் எழுதிய கமெண்டு அருமை. மாம்பழச் சாற்றில் தேன் ஊற்றிச் சாப்பிட்டது போல படத்தையும், கமெண்டையும் அனுபவித்தோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

200 ரூபாய் கொடுத்து தியேட்டரில் படம் பார்த்தாலும் கிடைக்காத திருப்தி, 8 ரூபாய் கொடுத்து ‘வண்ணத்திரை’ வாங்கி வாசித்தால் கிடைக்கிறது.
- கே.முருகன், திருவண்ணாமலை.

ஒரு குப்பைக் கதைக்கு மகுடம் சூட்டி, காலக்கூத்தைக் கண்டித்து, அபியும் அனுவுமை அரவணைத்து, ‘செமை’யாய் விமர்சன விருந்து கொடுத்து கலக்கிட்டீங்க சாமியோவ்...
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

மூணாவது பக்கத்துலேயே பரந்த முதுகை முழுசாக் காட்டி மூச்சடைக்க வெச்சுட்டீங்களே? வாரந்தோறும் சொர்க்கத்துக்கு போய்வரும் அனுபவத்தைப் பெறும் ‘வண்ணத்திரை’ வாசகர்கள் அத்தனை பேருமே மச்சக்காரங்கதான்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

மக்கள் பணியில் ஈடுபடும் சத்யராஜ் மகள் திவ்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.