அரசியலுக்கு வருகிறார் வம்பு!



சினிமாத்துறையிலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளானவர் என்று சாதனை செய்திருப்பவர் வம்பு. அவரது படம் வெளியாகிறதோ இல்லையோ, அவரைப் பற்றி யாரும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவார்.இப்போது திடீரென அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிப்பவர், இதற்குப் பிறகு நான் நடிப்பேனா தெரியாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

குழம்பிப் போய் நடிகரைத் தொடர்பு கொண்ட ரசிகர்களிடம், “சினிமா இல்லைன்னா என்ன, அரசியல் இருக்கில்லே? நாம அங்கே மீட் பண்ணுவோம். அனேகமாக 2026ல் நான்தான் தமிழ்நாட்டோட முதல்வரா இருப்பேன்னு நெனைக்கிறேன்” என்று தடாலடியாக சொல்லி வருகிறாராம்.

வம்புவின் அப்பா, அரசியலில் ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்திருந்தார். வம்புவுக்கே இவ்வளவு வாயென்றால், அவரது அப்பாவுக்கு எவ்வளவு வாய் இருக்கும்? வாயால் கெட்ட அப்பா, தான் விட்ட இடத்தை தன்னுடைய மகன் பிடிப்பான் என்று நம்புகிறாராம்.

- மீசை பாண்டியன்