வாலிபர்களை மயக்கும் வாலிபால் பிளேயர்!



இன்னொரு கேரள தேவதை, தருஷி, ‘செயல்’ மூலமாக சென்னைக்கு வந்திருக்கிறார்.“டெல்லியிலிருந்து எர்ணாகுளத்துக்கு வந்து பத்து வருஷம் ஆவுது. அப்பா விஜயகுமார், மிலிட்டரி கமாண்டிங் ஆபீஸர்.

அம்மா விபா, அக்கா பிரியான்ச்சு, நான், தங்கை குஷி, இதுதான் என் குடும்பம். பத்தாவது படிக்கிறப்ப, திடீர்னு மாடலிங் வாய்ப்பு வந்தது. முதலில் தயக்கமா இருந்தது. தீவிரமா யோசிச்சு பார்த்தப்ப, எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் இந்த மாதிரி நல்ல வாய்ப்பு கிடைக்காதுன்னு தோணுச்சு. ஓக்கே சொன்னேன்.

ஆறு வருஷம் பிஸியான மாடலா இருந்தேன். அப்போதான் ‘ஸ்டடி டூர்’ என்கிற படத்துலே ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பிளஸ் ஒன் படிச்சுக்கிட்டிருந்தேன். படிப்பு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம்னு மெயின்டெயின் பண்ணினேன். முதல் படத்திலேயே மலையாளப் பொண்ணு, தமிழ்ப் பொண்ணுன்னு டபுள் ரோல். ரெண்டு கேரக்டருக்கும் நல்ல வித்தியாசம் காமிச்சேன்.

தொடர்ந்து மலையாளத்தில் சில படங்கள் பண்ணி ணேன்.திடீர்னு ஒருநாள் தமிழில் நடிக்கக் கேட்டாங்க. டைரக்டர் ராமகிருஷ்ணன் ஹீரோவாக நடிச்ச ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தில் நடிச்சேன். படம் இன்னும் ரிலீசாகலை. அதுக்குப் பிறகு நடிச்ச ‘செயல்’ மூலமா தமிழில் ஹீரோயினா அறிமுகமானேன்.

சினிமாவுக்கு வர்றது பெரிய விஷயம் இல்லை. தொடர்ந்து இங்கே ஜெயிக்கணும். அதுதான் முக்கியம். அதுக்காக குதிரை சவாரி, டான்ஸ் கத்துக்கிட்டேன். கேரளாவில், நேஷனல் லெவல் வாலிபால் பிளேயரா இருக்கேன். என் தங்கை குஷிக்கும் ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வம். தவிர, கிடார் வாசிப்பேன்.

இப்ப திருப்புணித்துறா காலேஜில், பிசினஸ் மேனேஜ்மென்ட் பைனல் இயர் படிக்கிறேன். இனிமே நடிப்புக்கு முக்கியத்துவம் தருவேன். ஆடியன்ஸ் ரசிச்சு பாராட்டுற மாதிரி, வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசை. நயன்தாரா மாதிரி பிகினி டிரெஸ் போடுவியான்னு கேட்டு மிரட்டாதீங்க. ஸ்கிரிப்ட் என்ன ேகட்குதோ அதன்படி நடிப்பேன். கிளாமருக்கு நான் எதிரி கிடையாது.

துல்கர் சல்மான், விஜய், அஜீத், தனுஷ் இவங்க ஜோடியாக நடிக்கணும். ஹீரோயின்களில் த்ரிஷாவையும், சாய் பல்லவியையும் ரொம்பப் பிடிக்கும். இதுவரை யார்கிட்டேயும் வாய்ப்பு கேட்டு நான் நடிச்சதில்லை. என் அழகையும், திறமையையும் மதிச்சு வர்ற கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறேன்” என்கிற தருஷி, தமிழில் அதிகமாக நடித்தாலும், எர்ணாகுளத்தை விட்டு சென்னையில் செட்டிலாகும் எண்ணமில்லை என்கிறார்.

- தேவராஜ்