பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய நடிகர்!“காதல் செய்வது எனக்கு பிடிக்கும். ஆனால் காதலர்களைக் கண்டால் கொலை செய்வது ரொம்பப் பிடிக்கும். நானே தர்மன்; நானே எமன்” என்று வில்லத்தனமாக சிரித்துக் கொண்டே சொல்கிறார் ‘காதல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ படத்தின் இயக்குநர் சக்திவேல். படத்தில் ஹீரோ, ஹீரோயினே கிடையாதாம்.

இதில் அறிமுக நடிகர்கள் சூரியவர்மன், ராஜா, ஜிகார்த், நிஷா, நந்தினி, பழனி,  ஷேந், ரவி, ராஜா அப்பாசாமி, அண்ணாமலை ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, வசனம் சக்தி. திரைக்கதை, பாடல்கள் அம்மா சிவா ஓம். இசை சதா, கோகுல கிருஷ்ணன். ஒளிப்பதிவு வாசன் ரமேஷ். தண்டபாணி, ராமசாமி இணைந்து தயாரித்துள்ளனர்.

படப்பிடிப்பு வேலூர் பகுதியில் நடந்தபோது முக்கிய வேடத்தில் நடித்த சூரியவர்மன் பொது மக்களிடம் தர்ம அடி வாங்கினாராம். கதைப்படி இவர் முகமூடி அணிந்து நடிக்க வேண்டுமாம். அதே கெட்டப்புடன் ஊருக்குள் நுழைந்தபோது ‘புள்ளை புடிக்கிற ஆள்’ என்று நினைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம். விபரீதத்தை உணர்ந்த படக்குழு ‘சினிமா ஷூட்டிங்கிற்காக மூகமுடி அணிந்திருக்கிறார்’’ என்று விளக்கமளித்து நடிகரைக் காப்பாற்றினார்களாம்.

- எஸ்