ரஜினி இல்லேன்னா கஜினி!ஹீரோவாக புரமோஷன் ஆன அந்த காமெடி சாண்டல் ஆக்டர் செம காண்டில் இருக்காராம். இதுவரை அவர் ஹீரோவாக நடித்த எந்தப் படமும் கல்லா விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படி போணியாகவில்லை என்கிற கடுப்புதானாம். இதன் காரணமாக அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை அடிமாட்டு ரேட்டுக்கு கேட்கிறார்களாம் வினியோகஸ்தர்கள்.

காமெடியாக கூத்துக் கட்டிக் கொண்டிருந்தபோது வந்த பணவரத்து இப்போது நஹி என்பதால் அவரது அல்லக்கைகள் ஆட்டம் கண்டு போயிருக்கிறார்கள். “அண்ணே! மறுபடியும் காமெடி ட்ரை பண்ணலாமே?” என்று ‘விசேஷ’ தருணத்தில் அவரிடம் மெதுவாக ஆரம்பித்தால், பேயாட்டம் ஆடுகிறாராம் சாண்டல்.

“நான் சூப்பர் ஸ்டார் ரஜினி அளவுக்கு இல்லாங்காட்டியும் கஜினி சூர்யா லெவலுக்காவது ஒரு ரவுண்டு அடிப்பேன்” என்று சவால் விடுகிறாராம்.பெயரின் பின்பாதியில் மூவேந்தர்களில் ஒருவரைக் கொண்டவரும், காமெடிப் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவருமான அந்த இயக்குநரிடம் சாண்டல் புலம்பித் தள்ளியிருக்கிறார். “என்னை எப்படியாவது கமர்ஷியல் ஹீரோவா நீங்கதான் நிலைநிறுத்தணும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார். “ஆகட்டும், பார்க்கலாம்” என்று சொல்லியிருக்கிறார் மூவேந்தர்களில் ஒருவர்.

- பம்மல் கே.சம்பந்தம்