ஏமாலி



காதலியை கொல்லத்துடிக்கும் காதலன்!

பணக்கார நாயகன் சாம் ஜோன்சும், ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் நாயகி அதுல்யாவும் காதலர்கள். காதலில் திடீரென ஒரு சறுக்கல்.  கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில்  அதுல்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார் சாம். அதற்கு சமுத்திரக்கனியின் உதவியை நாடுகிறார். இவர்களது திட்டம் என்ன ஆனது என்பது கதை.

சாம் ஜோன்ஸ் முதல் படத்திலேயே நான்கு கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறார். காதல் தோல்வியால் ஏற்படும் உணர்வுகளை, உளைச்சலை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருக்கிறார் அதுல்யா. சமுத்திரக்கனி வழக்கம்போல தனது பங்களிப்பை அக்கறையோடு செய்திருக்கிறார். ரோஷிணி, பாலசரவணன், சிங்கம்புலி ஆகியோரும் தங்களது வேலையை கவனமாக செய்திருக்கிறார்கள்.

சாம் டி.ராஜின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.  பின்னணி இசையிலும் பலம் சேர்க்கிறார். ஐ.ஜே.பிரகாஷ், எம்.ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு  உறுத்தாத பதிவு.   இளைஞர்களைக் குறிவைத்து ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து ரசனையாக இயக்கியிருக்கிறார் வி.இசட் துரை.