ஆண்ட்டி மேனியா!



சரோஜாதேவி பதில்கள்

* நமீதா எங்கே நீச்சல் பயிற்சி செய்கிறார்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இடத்தை சொன்னால், டிக்கெட் போட்டு கண்காட்சி நடத்திவிடுவீர்களே?
* ‘மூடுபனி’. விளக்கம் ப்ளீஸ்...
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கடுங்குளிரில் ‘மூடு’ வரும் என்பதால், அந்தப் பெயர் வைத்தார்களோ என்னவோ? அதிருக்கட்டும். லிட்டர் கணக்கில் வியர்வை ஊற்றும் வெயிலில் ஏன் இந்த ஆராய்ச்சி?
* சரோஜா, குத்துமதிப்பாக நீங்கள் யாரை மாதிரி இருப்பீர்கள்?
- மு.ரா.பாலாஜி, கோலார்.
என்னுடைய போட்டோவை நேரடியாகவே கேளுங்களேன். எதற்கு என்னை குத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
* ‘ஒண்ணும் தெரியாத பாப்பா, போட்டுக்கிச்சாம் தாப்பா’ - இந்த பழமொழியின் தாத்பரியம் என்ன?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
பாப்பாவுக்கு தாப்பாளும் போடத் தெரியுமென்று அர்த்தம்.
* குஷ்பு, இன்னமும் இளமை குன்றாமல் இருக்கிறாரே?
- ப.முரளி, சேலம்.
‘ஆண்ட்டி மேனியா’வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.