கவர்ச்சியும் த்ரில்லும்!



‘ஜீ’, ‘லீ’, ‘தா’, ‘வா’, ‘கோ’ ‘உ’ போன்ற ஓரெழுத்துப் படங்கள் தமிழில் ஏராளம். அந்த வரிசையில் விரைவில் வெளிவருகிறது ‘வி’. சாகிற நாள் தெரிந்துவிட்டால் வாழ்கிற நாள் நரகமாகிவிடும் என்கிற கருத்தை மையமாக வைத்து படம் தயாராகி இருக்கிறது. ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்வின், ரினீஷ் என படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோக்கள். தேவசூர்யா, வில்ஜியா, நிமா, அஸ்வினி, ருதியா இதன் நாயகிகள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் டாவின்ஸி.



‘‘முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்’ என்பதுதான் படத்தின் கதைக்கரு. படத்தில் நடிக்கும் தொண்ணூறு சதவீத நடிகர், நடிகைகள் புதுமுகங்கள் என்பதால் மூன்று மாதம் ஒர்க் ஷாப் நடத்தினோம். இந்தப் படத்தில் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் போல கவர்ச்சியும் இருக்கும். ‘மாயா’ படம் போல த்ரில்லும் இருக்கும். எல்லாத்தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்த வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் கமர்ஷியலுக்கான சகல அம்சங்களையும் கலந்திருக்கிறேன்’’ என்கிறார் இயக்குனர் டாவின்ஸி.

- ரா