பிந்துமாதவியின் தைரியம்



அஜீத்தின் தீவிர ரசிகையான பிந்து மாதவி, அஜீத்தின் 56வது படத்தில் நடிக்கிறார் என்று வெளியான தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை, லட்சுமி மேனன் நடிப்பதால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘அந்த படத்துல நடிக்கணும்னு யாரும் என்கிட்ட கேட்கல’ என்று சில மாதங்களுக்கு முன் பிந்து மாதவி சொல்லியிருந்தார்.

இதையடுத்து திவ்யாவிடம் பேசியதாக சொன்னார்கள். அதுவும் வதந்தியாகி விட்டது. அஜீத் தங்கையாக நடிக் கும் லட்சுமிமேனன், ‘இதுபோன்ற கனமான கேரக்டர், வேறெந்த படத்திலும் எனக்கு கிடைக்காது’ என்கிறார். இதையறிந்த பிந்து மாதவி, அஜீத்தின் 57வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறாராம்.

-தேவா