சமந்தாவின் காஸ்ட்யூம் சென்ஸ்!



இப்போதெல்லாம் ரசிகர்கள் சமந்தாவின் நடிப்பைப் பற்றி விமர்சிப்பதை விட, ஒவ்வொரு படத்திலும், பொது மற்றும் சினிமா நிகழ்ச்சியிலும் அவர் அணிந்து வரும் ஆடைகள் பற்றித்தான் பேசுகிறார்கள்.

‘காஸ்ட்யூம் சென்ஸ் என்பது ஒவ்வொருவருக்கும் தேவை. ஆள் பாதி, ஆடை பாதி என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?’ என்று கேட்கிறார். வட இந்திய திரையுலகை விட, தென்னிந்தியப் படவுலகில் நவீன டிசைன்களில் ஆடைகள் அணிந்து நடிப்பது குறைவாக இருக்கிறது என்றும் வருத்தப்படுகிறார். போற போக்கைப் பார்த்தால், பெண்களுக்கான ஆடை, அணிகலன் கடையைத் திறந்து விடுவார் போலிருக்கிறது.

- தேவா