பிகினி உடையில் ஸ்ரீதேவி



பழைய ‘ஹீரோ’ பட ரீமேக்கில் ஜியா கான் தற்கொலைக்கு காரணமான சூரஜ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சல்மான் கான் கெஸ்ட் ரோல்.40 வயதைத் தாண்டியவர்கள் டூ பீஸ் அணியக்கூடாதா என கோபமாகக் கேட்கிறார் சமீபத்தில் பிகினியில் போஸ் கொடுத்த தேவி.ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடித்த ‘பாம்பே வெல்வட்’ இந்திப் படம் படுதோல்வி அடைந்ததில் ஷாக் ஆகியுள்ளது பட டீம்.

அன்னையர் தினத்தன்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டாராம் சோனாக் ஷி. தனது அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுத்து, தானே சமைத்து குடும்பத்தாருக்கு பரிமாறினாராம்.

இந்திய - சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஜாக்கிசானுடன் இணைந்து நடிக்க உள்ளார் ஆமிர்கான்.சல்மான்கான், கரீனா கபூர் காஷ்மீரில் ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். அங்கு தங்கியுள்ள ஓட்டலில், ஊழியர்களின் விருப்பத்துக்காக அரைநாள் அவர்களுடன் செலவிட்டார்களாம்.பல வருடங்களுக்கு முன் வெளியான ராம்கோபால் வர்மாவின் ‘ஆக்’ படத்தை கடுமையாக விமர்சித்தார் அனுராக் கஷ்யப். தற்போது அனுராக் இயக்கி வெளியான ‘பாம்பே வெல்வட்’ படத்தை டுவிட்டரில் திட்டித் தீர்த்துள்ளார் ராம் கோபால் வர்மா.

ஆபாசமாக போஸ் கொடுக்கிறார் என சன்னி லியோன் மீது போலீசில் புகார் அளித்து, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜான் ஆப்ரஹாம், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘வெல்கம் பேக்’ ஷூட்டிங், பைனான்ஸ் பிரச்னையால் தடைபட்டுள்ளது.

-ஜியா