காஜலுக்குக் கிடைத்த ஃப்ளையிங் கிஸ்!



காஜல் அகர்வாலுக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது. பிறகு எப்படி ‘பாயும் புலி’க்கு ஓட்டினார்? சுசீந்திரன் சொல்லிக் கொடுத்தபடி மயிலாப்பூர் லஸ் கார்னரில் இருந்து நாகேஸ்வர ராவ் பூங்கா வரை ஸ்கூட்டர் ஓட்டிய காஜல், அவ்வப்போது ஹேண்டில்பாரை நழுவ விட்டார்.

விழுந்து விடுவாரோ என்று யூனிட் பதறியது. ஆனால், எப்படியோ சமாளித்தார். அவர் வண்டி ஓட்டிய அழகைப் பார்த்த ரசிகர்கள், ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்து உற்சாகப்படுத்தினர். அருகிலுள்ள கேரவனில் ஓய்வெடுத்த விஷால், சூரி இருவரும் ரோட்டில் வண்டி ஓட்டிய காஜலின் திறமையைப் பாராட்டினர்.

‘அப்பா கமல் படத்தில் நடிக்க மறுக்கிறீர்களாமே?’ என்று கேட்டவுடனே பொரிந்து தள்ளுகிறார் ஸ்ருதிஹாசன். ‘ஒரு படத்துக்கு கேட்டார். அப்ப என்கிட்ட கால்ஷீட் இல்ல. இது அவருக்கும் தெரியும். ஆனா, அப்பா படத்துல நானும், என் தங்கச்சி அக்ஷராவும் நடிக்க மறுக்கிறோம்னு அவங்க இஷ்டத்துக்கு  எழுதறாங்க’ என்ற அவர், விஜய்யின் ‘புலி’, அஜித்தின் 56ஆவது படம் என பிசியாக இருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் அம்மணியின் கால்ஷீட் டைரி ஃபுல்லாகி விட்டதாம்.

- தேவராஜ்