‘விருமாண்டி’ ரிலீசான பிறகு அபிராமிக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நொந்து போனவர், பெற்றோருடன் வெளிநாட்டில் குடியேறி, ராகுல் என்ற விஞ்ஞானியைக் காதலித்து கரம்பிடித்தார்.

அவரை ஞாபகம் வைத்து, ‘விஸ்வரூபம்’ படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் பேச அழைத்து வந்த கமல், ‘பாபநாசம்’ படத்தில் வாய்ப்பு தருவதாக சொல்லவில்லை என்றாலும், அவர் தன்னை ஜோடியாக்குவார் என்று நம்பி ஏமாந்து விட்டாராம் அபிராமி. எனவே, அடுத்த படத்திலாவது கமலுடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்று, மலையாளக் கடவுளை மனமுருக வேண்டுகிறாராம்.
தேவா