கவர்ச்சி கலந்த புன்னகை!



வெளிநாட்டில் செட்டில் ஆன இந்திய குடும்ப வாரிசுகளில் பலர் பாலிவுட்டுக்கு வந்து டாப் ஹீரோயின்களாக ஜொலித்திருக்கிறார்கள். கேத்ரினா கைப், சினேஹா உல்லால், ஜரின் கான் என அடுக்கியபடி போகலாம். அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார் லிசா ஹேடன். லிசா ஆஸ்திரேலியாவில் வளர்ந்து படித்தவர். இவரது அப்பா மலையாளி, அம்மா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.

 லிசாவுக்கும் சென்னைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லிசா பிறந்தது சென்னையில்தான். அப்போது அவரது அப்பா சென்னையில்தான் பணிபுரிந்திருக்கிறார். பள்ளிப் படிப்பையும் சென்னையில்தான் ஆரம்பித்திருக்கிறார் லிசா. வியாபார விஷயமாக ஆஸ்திரேலியா சென்ற குடும்பம் அங்கேயே செட்டில் ஆகிவிட, லிசாவும் வெளிநாட்டு வாழ் இந்தியராகிப் போனார்.

மாடலிங் மூலம் இந்தியாவுக்கு வந்தவருக்கு பாலிவுட் இண் டஸ்ட்ரி சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்துவிட்டது. அதற்கு காரணம், லிசாவின் புன்னகைதான் என்கிறார்கள் பாலிவுட் டைரக்டர்கள்.

லிசாவின் கவர்ச்சி கலந்த புன்னகை, சார்மிங் ஃபேஸ்கட் இது இரண்டும் அவரது அழகைக் கூட்டுகிறது எனப் புகழ்கிறார் அனில் கபூர். லிசாவை நடிகையாக அறிமுகப்படுத்தியவர் அனில்தான். அவர் தயாரித்த ஆயிஷா படத்தில் செகண்ட் ஹீரோயினாக லிசாவை நடிக்க வைத்தார். அதில் அதிகம் கவனிக்கப்படாத லிசா, சஞ்சய் தத், அஜய் தேவ்கன் நடித்த ராஸ்கல்ஸ் படத்தில்தான் பிரபலம் ஆனார், காட்சிக்கு காட்சி பிகினி யில் நடித்து.

இந்தப் படத்தில் லிசாவின் கவர்ச்சி, பாலிவுட¢டில் கிளர்ச்சியை ஏற்படுத்த, குயின் படத்தில் ஹீரோயின் கங்கனாவுக்கு இணையான வேடம் அவருக்கு கிடைத்தது. அதில் கால் கேர்ளாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். லிசாவுக்கு நடிக்கவும் தெரியும் என குயின் படத்தில் காட்டிவிட்டார். இந்த ஒரே படத்தால் ஒரேடியாக ஜாக்பாட் அடித்தது லிசாவுக்கு. சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாருக்கு ஜோடியாகிவிட்டார்.

தொடர்ந்து டபுள் ஹீரோயின் கதைகளில் செகண்ட் லீட் செய்து கொண்டிருந்தவர், ஷவ்கின்ஸ் படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார். அவரை சிபாரிசு செய்தவர் அக்ஷய்குமார்தான். மூன்று தாத்தாக்கள் ஒரு சின்ன பெண்ணிடம் ஜொள்ளு விட்டு லொள்ளு செய்வதுதான் கதை. இதனால் படத்தில் கவர்ச்சியை அள்ளி வீசியிருந்தார் லிசா. அவரது அழகில் சொக்கிப் போன டைரக்டர் விக்ரம் பட், தனது அடுத்த படத்துக்கும் அவரை புக் செய்துவிட்டார். இதுவும் கிளுகிளுப்புக் காட்சிகள் நிறைந்த படமாம்.

'தொடர்ந்து இதுபோல் நடித்துக் கொண்டிருந்தால் உனது திறமை பாதிக்கும். உனக்குள் நல்ல நடிகை உறங்கிக் கொண்டிருக்கிறாள். அதைத் தட்டி எழுப்பு' என அவருக்கு சின்சியராக அட்வைஸ் செய்திருக்கிறார் மூத்த டைரக்டர் மகேஷ் பட்.

ஆனால் இதற்கு எதிர்மாறான கருத்தை சொல்லியிருக்கிறார் பெண் டைரக்டரான பர்ஹா கான். இப்போதுள்ள ஹீரோயின்களில் கிளாமர் லுக்குடன் யாரும் இல்லை. அந்த நடிகைகள் நடிக்கும் படங்களில் அயிட்டம் சாங்கிற்கு மாடல்களை அழைத்து வரவேண்டியுள்ளது. ஆனால் லிசா நடித்தால் அந்த படத்துக்கு கவர்ச்சிக்காக மாடல் அழகிகள் தேவையில்லை என சர்ட்டி பிகேட் தருகிறார்.

-ஜியா