பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை கவர்ந்து, கரம்பிடித்த ஜெனிலியா சமீபத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ‘ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்று, அடுத்த குழந்தை வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டாராம். குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா மும்பையில் தடபுடலாக நடந்தது. ‘ரியான் ரிதேஷ் தேஷ்முக்’ என்று பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.
