குறித்த காலத்தில் ‘லிங்கா’ படத்தை முடித்து ரிலீஸ் செய்த குழுவினரை மனதாரப் பாராட்டிய ரஜினி, அவர்களில் சிலரை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து நினைவுப் பரிசு தந்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டாராம்.

இதே குழுவினருடன் இணைந்து மீண்டும் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னாராம். ‘லிங்கா’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கும் படத்திலும் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, உதய நிதியுடன் ‘நண்பேன்டா’, ஜெயம் ரவியுடன் ‘தனியொருவன்’, சூர்யாவுடன் ‘மாஸ்’, ஆரியுடன் ‘நைட் ஷோ’, கார்த்தியுடன் ‘காஸ்மோரா’, விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்’, ஜீவாவுடன் ஒரு படம் என, மறுபடியும் பிஸியாகி விட்டார் நயன்தாரா.
மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.சொந்த வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ கமெண்டுகள், கிசுகிசுக்கள் வந்தாலும் கவலைப்படாத அவர், இதுபோன்ற நெகட்டிவ் பப்ளிசிட்டிதான் தன்னை அனைவருக்கும் பரவலாக தெரிய வைக்கிறது, படங்கள் கிடைக்க உதவி செய்கிறது என்று, தன் தோழிகளிடம் சொல்லி வருகிறாராம்.
தேவராஜ்