அஞ்சலிக்கு வந்த கோபம்!



சுராஜ் இயக்கும் தமிழ்ப்படம் மற்றும் ஒரு கன்னடப்படம் தவிர, அஞ்சலியின் கைவசம் எதுவுமில்லை. அதனால், இந்தப்படங்களை முடித்துவிட்டு, ஐதராபாத் தொழிலதிபரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் என்று ஒரு செய்தி கிளம்பியது. இது பற்றிக் கேட்டபோது, ‘எனக்கு அப்படியொன்றும் வயதாகிவிடவில்லை. என்னைவிட மூத்த நடிகைகள் பலர், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிக்கிறார்கள். அவர்களைப் பற்றி இப்படி செய்தி வருவதில்லை. எனக்கு கெட்ட நேரம்.

என்ன செய்வது?’ என்று கோபத்துடன் கேட்கிறார் அஞ்சலி.“அப்பா பரத்வாஜ் தெலுங்குக்காரர்,  அம்மா ராதா மராத்தி என்பதால் எனக்கு இரண்டு மொழிகளும் தெரியும். அதுமட்டுமல்ல, தமிழ், ஆங்கிலம், பெங்காலி, இந்தி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் பொளந்து கட்டுவேன்’’ என்கிறார் பிரியா ஆனந்த்.