இந்தியில் பேச அனுஷ்கா தயார்!



பாலிவுட் இயக்குனர் ஈஸ்வர் நிவாஸ் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘ஜூவனில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம். இதில் நாயகியாக நடிப்பதற்கு சல்லடைபோட்டு ஹீரோயின்களைத் தேடிய இயக்குனர், கடைசியாக அனுஷ்காவை அணுகியிருக்கிறார். ‘கதை பிடித்திருப்பதால் கால்ஷீட் தர ரெடி’ என்று க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாராம் அனு.

ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, இங்கே வாய்ப்பு கிடைக்காததால் மும்பையில் டேரா போட்டு, ஆக்ட் கொடுத்து வருகிறார். மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்துக்கு இவரை நாயகியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ‘கால்ஷீட் கைவசம் இல்லை’ என்று கையை விரித்துவிட்டாராம் பூஜா.