கோலிவுட்டில் புறக்கணிப்பு!



மலையாளத்தில் மோகன்லாலுடன் மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ சூப்பர்ஹிட் ஆனது.  தெலுங்கு  ரீமேக்கை  ஸ்ரீபிரியா இயக்கினார். வெங்கடேஷ் ஜோடியாக நடித்தார் மீனா. இதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதன் கன்னட ரீமேக்கில் அவரால் நடிக்க முடியாதபோது, நவ்யா நாயர் நடித்தார். இப்போது தமிழில் ‘த்ரிஷ்யம்’ ரீமேக் ஆகிறது. கமல்ஹாசன் நடிக்கிறார்.

அவருக்கு மீனா ஜோடி இல்லை. கவுதமி நடிப்பார் என்கிறார்கள். இதையறிந்து வருத்தப்பட்ட மீனா, ‘தமிழில் மட்டும்தான் என்னை கல்யாணமான நடிகைன்னு சொல்லி புறக்கணிக்கிறாங்க’ என்று புலம்புகிறார்.

‘சுண்டாட்டம்’ பிரம்மாவிடம் பணிபுரிந்த ஸ்டீவன் தனது ‘அட்டு’ படத்தின் நிறைவுப்பகுதிகளை இயக்கிவருகிறார். இவர் ‘பிளட் ரெவல்யூஷன்’ குறும்படத்துக்காக ‘பெஸ்ட் டைரக்டர்’ விருது பெற்றவர். புதுமுகம் அருண், அர்ச்சனா ரவி நடிக்கும் இந்தப்படம், வடசென்னை ரவுடியிசம் பற்றிய உண்மைக்கதை.