சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்க, ‘எங்கேயும் காதல்’ படம் எல்லா இடங்களிலும் திரையிடுவதற்கு தயாராகி விட்டது.
‘‘எனது முந்தைய படங்களைவிட ‘எங்கேயும் காதல்’ வித்தியாசமான படமாக இருக்கும். எதுமாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் புதுமாதிரியாக இருக்கும் என்பது நிச்சயம்’’.
‘எங்கேயும் காதல்’ படத்தை இயக்குவதற்கு முன்பாகவே டைரக்டர் பிரபுதேவா கொடுத்த ஸ்டேட்மென்ட் இது.
அவர் கொடுத்த ஸ்டேட்மென்ட் சரிதான் என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள் முழுப்படத்தையும் பார்த்த சினிமா ஜாம்பவான்கள்.அத்தனை பாடல்களும் ஹிட் ஆனதில், ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமல்லாமல் இசைப் பிரியர்கள் அத்தனைபேரும் ஆரவாரத்தோடு மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்.
‘‘இந்தக் கதையை என்னிடம் பிரபுதேவா ஒரு மணி நேரத்துக்குள் சொல்லிமுடித்துவிட்டார். எட்டுப் பாடல்கள் வேண்டும். அத்தனையும் ஹிட்டுப் பாடல்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு மெட்டும் உருவானவுடன் பிரபுதேவாவிடம் போட்டுக் காட்டுவேன். அவரது முகத்தில் மகிழ்ச்சி தெரியும். உடனே எனது மனதுக்குள் நிம்மதி ஏற்படும். இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்ட நண்பர்களும் ரசிகர்களும் வித்தியாசமாக இருக்கிறது என்று வாழ்த்துகிறார்கள். பிரபுதேவாவுடன் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது’’ என்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
பிரபுதேவாவின் சகோதரர் ராஜூசுந்தரம் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
நடன இயக்குனர் ஸ்ரீதர் நான்கு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சில இடங்களில் பிரபுதேவா சொல்லும் திருத்தங்களைச் செய்து, இவர் அமைத்துள்ள நடனத்தை வெளிநாட்டினரே ரசித்து, வேடிக்கை பார்த்து அசந்துபோயுள்ளனர். இந்த நடனக்குழு பிரான்சில் தங்கியிருந்த 35 நாட்களுமே விழாக்கோலமாக இருந்ததாம்.
எனது முந்தைய படங்களில் இப்படிப்பட்ட பாடல்கள் அமையவில்லை. ஸ்டைலிஷ் படமான இதில் எல்லாப் பாடல்களுமே ஸ்டைலிஷ்தான்.
“எனது ஹேர் ஸ்டைலை யூனிக் ஸ்டைல் என்று சொல்லும் வகையில் அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் உள்ள எனது ஹேர் ஸ்டைல் போலவே உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலரைப் பார்க்க முடியும் என்பது நிச்சயம்.
இந்தப்படத்தில் பயன்படுத்திய காஸ்ட்யூமை வீட்டுக்கு எடுத்துவந்துவிடலாமா என்று தோன்றியது” என்று சிரிக்கிறார் ‘ஜெயம்’ ரவி.
நெல்பா