500 பேரை ஆட வைத்தார்
‘கா தல்’, ‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘நான் மகான் அல்ல’ போன்ற வெற்றிப்பட நடன இயக்கு னராக பணியாற்றியவர் ‘காதல்’ கந்தாஸ். தற்போது ‘அரவான்’, ‘கருப்பர் நகரம்’, ‘உயிரை தொலைத் தேன்’, ‘சூழல்’, ‘பொருளு’, ‘கன்னிகா புரம் சந்திப்பில்’ உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
‘‘சமீபத்தில் ‘அரவான்’ படத்துக்காக மதுரை அருகில் மலை சார்ந்த ஒரு மைதானத்தில் பிரம்மாண்டமான பாடல் காட்சிக்கு நடனம் அமைத்தேன். 18ம் நூற்றாண்டில் நடக்கும் அந்த பாடல் காட்சியில் 500 நடன கலைஞர்கள், 100 மக்கள் என மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்’’ என்கிறார் ‘காதல்’ கந்தாஸ்.
ஸ்டூடண்ட் கிக் “பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைப் பற்றிய கதைதான் ஏஞ்சல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ‘பாசக்கார நண்பர்கள்’. நண்பர்களுக்காக உதவி செய்யும் நோக்கத்தில் சக மாணவன் அஜ்மல்கான் உலகளவில் நடக்கும் கிக்பாக்சிங்கில் கலந்து கொண்டு அதன் மூலம் நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்கிறான். தடைகளை கடந்து லட்சியத்தை எப்படி நிறைவேற்றுகிறான் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.
நாயகன் அஜ்மல் ஜோடியாக திவ்யா நாகேஷ் நடிக்கிறார். தினாவின் இசை படத்துக்கு பலமாக இருக்கும். இந்தப் படத்தை இயக்குவதுடன் கிக்பாக்ஸிங் பயிற்சியாள ராகவும் நடித்துள்ளேன்’’ என்கிறார் பெரோஸ்கான்.
துணிச்சலான அப்பாவிஹீரோக்கள் படிப்பை முடித்துவிட்டு நடிக்க வருவார்கள். ஆனால் ‘அப்பாவி’ படத்தில் ஹீரோவாக நடித்த கௌதம் படித்துக்கொண்டே நடிக்க ஆரம்பித்துள்ளார். ‘‘எனக்கு சொந்த ஊர் சென்னை. லயோலா கல்லூரி மாணவன். எனக்குள் இருந்த சினிமா ஆசையை அப்பா, அம்மாவிடம் தெரிவித்தபோது உற்சாகப் படுத்தினார்கள். அதன் பிறகு சினிமாவுக்குரிய நடனம், சண்டை கற்றுக் கொண்டு புகைப்படங்களுடன் இயக்குனர் ரகுராஜ் முன் நின்றேன்.
‘அப்பாவி’ எனக்கு சினிமாவில் நடை தொடக்கத்தை கொடுத்துள்ளது. அந்தப் படத்துக்கு பிறகு ‘இவனும் பணக்காரன்’ படத்தில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறேன்” என்று சொல்லும் கௌதம், ஒரே பாணியிலான படங்களை தவிர்த்து அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பாராம்.