ஏழைக்காதலன், பணக்கார காதலி எனற வழக்கமான காதல் கதையை சிரிப்பு என்ற மருந்து தடவி சொல்லியிருக்கிறார்கள்.
புதுமுகம் சதீஷ் ஹீரோவுக் கான எந்த பந்தாவும் இல்லாமல் கேரக்டராக வாழ்ந்திருக்கிறார். ‘காடர்ன் ப்ரஷ்’ எனுமளவுக்கு அமலா பால் முகத்தில் மலர்ச்சி மாலையாகத் தொங்குகிறது.
அம்மணிக்கு முதல் படம் என்றாலும் காதல், பாடல் எதுவானாலும் பயமில்லாமல் அசத்தியிருக்கிறார்.
புகழ் பெற்ற காமெடியன்கள் செய்யக்கூடிய வேலையை ஹீரோவின் ஃப்ரெண்ட்ஸ் நிமிடத்துக்கு ஒரு முறை சிரிக்க வைக்கிறார்கள். நல்லவன் போல் நடித்திருக்கும் வில்லன் நடிகர் பழனிகுமார் முதல் படம் என்ற சுவடு இல்லாமல் தெரிகிறார்.
புதுமுகங்களை வைத்து போரடிக்காமல் கதை சொல்லி யிருக்கும் கிருஷ்ணனை பாராட்டலாம்.