“கட்டிட வேலை செய்யும் பொன்வண்ணன், வேலை முடிந்ததும் பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் சேர்ந்து தெரு முனையில் ‘கேரம்’ விளையாடுவார். ஒரு கட்டத்தில் ஆதரவு இல்லாத ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்ப்பதுடன் கேரமும் சொல்லித் தருகிறார்.
தத்துப் பையனை உலகம் போற்றும் சாதனையாளனாக மாற்றுவதுதான் திரிபுர சுந்தரி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘விளையாடவா’ படத்தின் கதை” என்கிறார் இயக்குனர் விஜய நந்தா. இவர் ஷாம்&சினேகா நடித்த ‘நீலோ நாலோ’ தெலுங்குப் படத்தை இயக்கித் தயாரித்தவர்.
இதில் நாயகனாக புதுமுகம் பாலாஜி நடிக்கிறார். நாயகிகளாக திவ்யா பத்மினி, ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். நண்பர்களாக மயில்சாமி, லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள்.
‘‘கேரம் விளையாட்டைப் பற்றிய கதையாக இருந்தாலும் காதல், மோதல், நகைச்சுவை என எல்லாம் கலந்த படமாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் விஜயநந்தா.
எஸ்