ப்ரியங்களுடன்…
* வீட்டுப் பொருட்கள் பராமரிப்பு தகவல்கள் பயனுடையதாயிருந்தது. சமையல் கலைஞர் நாகலட்சுமியின் சத்தான பாகு உருண்டைகளை வாசிக்கும் போது சுவையாக இனித்தன.
- இல.வள்ளிமயில், மதுரை.
 * பாம்பின் கால் பாம்பறியும் என்பாங்க. பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு சொந்த முயற்சியில் பயிற்சி, உதவி, புகலிடம் கொடுத்து தொண்டாற்றி வரும் ஜெயக்கொடி பெண் அல்ல, பெண் தெய்வமாகவே அவரைப் பார்க்கிறேன்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
* மருத்துவத்துறையில் பல அரிய கண்டு பிடிப்புகள், சாதனைகள், வளர்ச்சிகள், திறமைகள், செய்த பெண்களை பற்றி வெளித்தெரியாத வேர்கள் தொடர் மூலம் பலரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ேதாழிக்கு நன்றி.
- பிச்சை சுவாமிநாதன், தேதியூர்.
* மாஸ்டர் செஃப் தேவகி பேட்டி கண்டேன். திறமை மட்டும் இல்லாமல் மனகுல தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். எதையும் சாதிக்கலாம். மற்றவர்கள் சப்போர்ட் இல்லாமல் இருந்தால் நான் ஜெயித்திருக்க முடியாது என்று கூறினார் பாருங்கள். அதுதான் அவருடைய ப்ளஸ் பாயின்ட்.
- வண்ணை கணேசன், சென்னை.
*தெலுங்கானா கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் 10000 சன்மானம், ‘நியுஸ் பைட்ஸ்’ தகவல் மிகுந்த மனநிறைவைத் தந்தது. பெண்மையைப் போற்றுபவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
* நடிகை சபத்ராவின் பேட்டி கண்டேன். தன்னைப்பற்றி கூறியது... எப்படி வாய்ப்பு கிடைத்தது... படத்தில் அவர் நடித்த அந்த வலிகள் நிறைந்த காட்சி குறித்து விவரமாக சொன்னது அனைத்தும் சுவையாக இருந்தன.
- கணேசன், பொன்னியம்மன்மேடு.
* கார்டூனிஸ்ட் பிதாமகனுக்கு பத்ம என்ற தலைப்பில் சந்தாமாமா சங்கர் அவர்களின் சிறப்புகளை விவரித்த கட்டுரை சிறுவயதில் அம்புலிமாமா புத்தகத்தை படித்த அனுபவங்களை அசை போட வைத்தது.
- அயன்புரம் சத்தியநாராயணன், பட்டாபிராம்.
அட்டைப்படம்: ஹேமா ஆறுமுகம்
ஸ்டில்ஸ் : குணா
|