ஆபரணங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்



வாசகர் பகுதி

சாதாரணமாக ஒரு விசேஷம் என்றால் பெண்கள் ஆபரணங்கள் அணிவது வழக்கம். அவ்வாறு அணிந்து செல்லும் எந்த வகையான ஆபரணங்களாக இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க வேண்டும்.

* நகைகளை அணிந்து விசேஷத்துக்கு சென்று வந்த பிறகு அதை காற்றாட கழட்டி வைத்துவிட்டு பிறகு நகைப்பெட்டியில் எடுத்து வைக்கலாம்.

* ஆர்டிபிஷியல் நகைகளை பாலிஷிங் பேட்ஸை கொண்டு மெதுவாகத் தேய்த்தால் பளபளப்பாகும்.

* பழைய கம்பளி துணியால் பித்தளை அல்லது வெள்ளி நகைகளை தேய்த்தால் கருமை நீங்கி பளபளப்பாகும்.

* கிரிஸ்டல் நகைகளை சோப்பைத் தண்ணீரில் சாஃப்ட் டூத் பிரஷால் சுத்தம் செய்யலாம்.

* ஃபேஷன் நகைகளை மேக்கப் பொருட்களான லோஷன், நெயில் பாலிஷ் ரிமூவர், சென்ட், ஹேர் ஸ்பேரே ஆகியவற்றிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.  

* முத்து நகைகள் வியர்வை படுவதால் மற்றும் சென்ட் பயன்படுத்துவதால் அதன் பளபளப்பை இழக்கும். முத்து மாலையை அணிந்த பிறகு பஞ்சு அல்லது டிஷ்யு
பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.

- எஸ். மாரிமுத்து, சிட்லபாக்கம்.

பெண்களுக்கான சாதனையாளர் விருது!

பெண்கள் இந்நாட்டு கண்கள்... போன்ற சொல்லுக்கு உதாரணமாக ஊருணி அறக்கட்டளை, 2018ம் ஆண்டு “உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது” என ஒரு தனித்துவமான விருதினை பெண்களுக்காக பிரத்யேகமாக அறிமுகம் செய்தது. இந்த காலத்தில் பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். வீட்டையும் கவனித்துக் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்து வருகிறார்கள்.  இவர்களை கவுரவிக்கும் வகையில் தான் சாதனையாளர் விருதினை ஊருணி அமைப்பு துவங்கியது.

இதன் மூலம் உழைக்கும் பெண்களின் பங்களிப்பு மட்டுமில்லாமல் அவர்கள் எல்லா துறையிலும் திறமையுடன் செயல்படுகிறார்கள் என்பதற்கான ஒரு அடையாளமாகவும் இந்த விருது இருக்கும். முகம் தெரியாமல், சத்தமில்லாமல் சாதனை படைத்து வரும் பெண்களுக்கு இந்த விருது மேலும் ஒரு உத்வேகம் அளிப்பதுடன் அவர்களை ஒரு அடையாளமாக கொண்டு மற்ற பெண்களும் தங்களுக்கு ஒரு பாதையினை தேர்வு செய்ய முன்வருவார்கள். அப்படிப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு ஊருணி அறக்கட்டளை கௌரவித்து வருகிறது.

விருதுகள் குறித்த முடிவுகளை சிறப்பு நடுவர் குழு மூலமாக முடிவு செய்யப்படும். பல்வேறு தொழில் துறையை சேர்ந்த ஐம்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் தொழில் சார்ந்து சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுக்கான விருதில் பங்கு பெற இருப்பவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதிக்குள் http://oorunifoundation.com/wwaa-2022-nomination/ இணையத்தில் விண்ணப்பிக்கலாம். உழைக்கும் பெண்களின் ஆளுமையை இவ்வுலகத்திற்கு பறைசாற்றுங்கள்!

- ப்ரியா மோகன்