உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி!‘‘அதிக முதலீடு தேவையில்லை. கடின உழைப்பை காணிக்கையாக்கினால் எளிதாக வெற்றிபெறலாம்’’ என்கிறார், வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் அனிதா டேவிட்.

‘‘நாங்க 30 வருடங்களுக்கு மேலாக ‘வால்ரஸ்’ பனியன் துணிகளை மொத்தம் மற்றும் சில்லறை முறையில் வியாபாரம் செய்கிறோம். எங்களின் முக்கிய அம்சமே லாபத்தில் அனைவருக்கும் பங்கு என்பதுதான். அதாவது நியாயமான விலை, தரமான பொருள். அந்தக் கொள்கையின் அடிப்படையில் ‘அதிக விற்பனை, குறைந்த லாபம்’ என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்்’’ என்றவர் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி
வருகிறார்.

‘‘எங்க நிறுவன உடைகளை உற்பத்தி விலையில் பெற்று லாபத்திற்கு விற்பனை செய்வதால், வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த பெண்கள் இன்று தொழில் முனைவோராக மாறியுள்ளனர். கொரோனா காலத்திலும் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்கிறார்கள்.  திருப்பூர் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள், ் வெளிநாடுகளுக்கும் ஆர்டரின் பேரில் சப்ளை செய்கிறோம். இனி வரும் காலங்களில் கடினமாக உழைத்தால் தான் வெற்றிபெற முடியும்’’ என்றவர் சிறு தொழில்முனைவோருக்கும் ஒரு வழிகாட்டியாக உள்ளார்.

‘‘எங்களிடம் துணி கொள்முதல் செய்து, ஆடை தயாரித்து, எங்களிடமே விற்பனை செய்யலாம். உழைப்பையும், நேரத்தையும் வீணாக்காமல் வாழ்வில் வளம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு’’ என்றார் அனிதா.

ரத்தத்தை சுத்திகரிக்கும் குள்ளகார் அரிசி!

பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி தவிர பல வகை அரிசிகள் உள்ளன. அவற்றின் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

*கருப்பு கவுனி அரிசி - புற்றுநோயை வராமல் தடுக்கும். இன்சுலினை சுரக்க உதவும்.    
*காலாநமக் அரிசி - மூளை, நரம்பு மண்டலத்தை சீராக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.    
*பிசினி அரிசி - மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.    
*கார் அரிசி - தோல் நோய் சரியாகும்.    
*தங்க சம்பா அரிசி - பல், இதயம் வலுவாகும்.    
*மூங்கில் அரிசி - மூட்டுவலி, முழங்கால் வலியை போக்கும்.
*கிச்சிலி சம்பா அரிசி - இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்தை தந்து உடலை வலுவாக்கும்.    
*குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்.    
*காட்டுயானம் அரிசி - நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோயை வராமல் தடுக்கும்.    
*குதிரைவாலி அரிசி - தசைகள், எலும்புகள் வலுவாகும். ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை போக்கும்.    
*வரகரிசி - உடல் பருமனை குறைத்து மலச்சிக்கலை தடுக்கும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.    
*சீரகச் சம்பா அரிசி - எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.    
*சாமை - உடல் வறட்சி மற்றும் ஆண்மை குறைவை போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைத் தடுக்கும். ரத்த சோகையை நீக்கும்.    
*கைக்குத்தல் அரிசி - புற்றுநோய், சிறுநீர் கல் வராமல் பாதுகாக்கும். உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.    
*மாப்பிள்ளை சம்பா அரிசி - நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை அதிரிக்கும்.    
*சூரக்குறுவை அரிசி - உடல் பருமனை போக்கும்.    
*குள்ளகார் அரிசி - ரத்தத்தை சுத்தமாக்கி தோல் நோய்களை குணமாக்குகிறது.    
*இலுப்பை பூசம்பார் அரிசி - பக்கவாதத்திற்கு நல்லது. கால் வலியை சரியாக்குகிறது.    
*கருத்தக்கார் அரிசி - மூலம், மலச்சிக்கலை போக்குகிறது.  

- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.