ப்ரியங்களுடன்
கல்யாணமா எங்கிட்டே வாங்க... பணம் இருந்தால் போதும் உட்கார்ந்த இடத்திலேயே முடித்து விடலாம் என்று கூறும் தோழிகள் சுகன்யா மற்றும் பயஸ் நட்புடன் இணைந்து தொழில் செய்வது மற்றவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது. - வண்ணை கணேசன், சென்னை.
இயந்திர சாதனங்களுக்கு அடிமையாகி மீளமுடியா மனித வாழ்வு சூழலை மீட்டெடுக்க சமூக வலைத்தளமும் மூளையின் வேதியியல் மாற்றங்களும் கட்டுரை கனகச்சிதமாக கணிப்பான கருத்தை திறம்பட உரைத்தது. - கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.
 ஒமேகா 3 அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட்டு வர நம் உடல்நலம், மனநலம் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்த்தியது. நன்றி! ‘நாங்களும் விளையாடுவோம்’ வாசித்த போது மனம் நெகிழ்ந்தது. மாற்றுத்திறன் குழந்தைகளின் எண்ணங்களுக்கு ஏற்றம் கொடுப்பதாக இருந்தது. வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டால் அதுவே தனி மகிழ்ச்சி என்று நிஜத்தைப் பகிர்ந்துள்ளார் சுந்தரி கிருஷ்ணா. - எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.
காமன் வெல்த்தில் வாள் சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திட்ட இந்தியாவின் வாள் வீச்சு ராணி பவானிதேவி பற்றிய கட்டுரை செமதூள். ஆண்களே போடத் தயங்கும் வாள் சண்டையில் முத்திரை பதித்த அவருக்கு பூச்செண்டு. - அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.
‘‘It is a Wounderful life’’ படத்தின் கதை வித்தியாசமாகவும், விறு விறுப்பாகவும் இருந்தது. மனித பிறப்பின் மகத்துவத்தை அற்புதமாக எடுத்துக் காட்டியது. நேரம் போனதே தெரியவில்லை, நினைவை விட்டு இன்னும் அகலவில்லை, really Fantastic. - எஸ். கெஜலட்சுமி சிவானந்தம், லால்குடி.
‘அபாயத்தை துணிந்து எதிர் கொள்’ என்ற தலைப்பிலான தயாரிப்பாளர் குனீத் மோங்காவின் அறிவுரைகள் யாவும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவைகளாகவும் தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தன. - வி.கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி.
தசாவதானி ஓவியா என்ற கட்டுரையில் வெளிப்பட்டிருந்த தகவல்கள், ஓவியாவின் ஒத்த வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தன. - மோனிஷா பிரியங்கா, திருச்சி.
ஒரு ஆப் நம் பெரிய பிரச்னையை எளிதாக்கி விடுகிறது என்பதை படித்து வியந்ததோடு, உபயோகித்து பயனடைய ஆவல் கொண்டோம். - மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.
|