பை ஏசி வாட்ச் IPL ஈசி
தினகரன் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ‘‘எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் எக்ஸ்போ 2019’’ எனும் 4 நாட்கள் கண்காட்சி கடந்த மார்ச் மாதம் 22-25 தேதிகளில் நடைபெற்றது. இதில் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளான டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சோபா, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் இடம்பெற்றது. குறிப்பாக, சத்யா நிறுவனம் சார்பில் புதுப்புது வகையான டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவற்றின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், S5 Health Care, Abhi imports & Exports, Bison Cleaning Products, Agasthiar Pranava Peedam ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின. கண்காட்சியில் பங்கேற்ற இந்நிறுவனங்களின் சிறப்பு, சலுகை, தள்ளுபடி விலை குறித்து விளக்கினர்.
 நான்காவது ஆண்டாகத் தினகரன் நாளிதழோடு இணைந்து இந்த கண்காட்சியில் பங்கேற்கிறோம் என்று பேச ஆரம்பித்தார் சத்யா நிறுவன நிர்வாக இயக்குனர் ஜாக்சன். ‘‘கோடை காலம் என்பதால் ஏசிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். எங்கேயும் கிடைக்காத விலையில் ரூ.22,990க்கு ஒன்றரை டன் ஏசி அண்டர் எக்சேஞ்சில் இங்கு கிடைக்கும். சுலப தவணையாக ரூ.101 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஐ.பி.எல் சீசன், அதனால் 2 ஏசி வாங்கினால், 32” LED டிவி இலவசமாக, ‘‘பை ஏசி வாட்ச் IPL ஈசி” என்ற கான்செப்ட்டில் தருகிறோம்.
இதுபோக மிக்சி, கிரைண்டருக்கு ரூ.500 தவணைத் தொகை செலுத்தி பெற்றிடும் வசதியும் ஏற்படுத்தியிருக்கிறோம். வாங்கும் எல்லா பொருட்களுக்கும் அட்ராக்ட்டிவ் பரிசு கொடுத்து வருகிறோம். கிரெடிட் கார்ட் கேஷ் பேக் ஆஃபர் 15% வரை இருக்கிறது. ஆதார் கார்டு, சிபில் ஸ்கோர் அடிப்படையில் பினான்ஸ் வசதி செய்து தருகிறோம். ஃபேம்லி ஹப் என்கிற புது ரெஃபரிஜிரேட்டர் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதிலேயே டிவி இருப்பதால் இல்லத்தரசிகள் டிவி பார்த்துக் கொண்டே சமையல் வேலைகளை பார்க்கலாம்”என்றார்.
அழகு+ஆரோக்கியம்
S5 ஹெல்த் கேர் மேனஜிங் டைரக்டர் சல்மா பேகம் தங்களது நிறுவனம் பற்றி விளக்கினார். “அடிப்படையில் நான் ஒரு டயட்டீஷியன். இந்த துறையில் 15 ஆண்டுகள் இருக்கிறேன். Slim, Skin, Scalp, Saloon and Spa என்ற புரோகிராமை நாங்கள் செய்து வருகிறோம். அதிகமான ஜங்க் ஃபுட், மன உளைச்சல் என நம் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதை எப்படி ஹெல்த் மற்றும் அழகை பாதிக்காமல் சரி செய்வது. உடல் எடையை குறைப்பதற்கு, மருந்து, பக்கவிளைவுகள், சர்ஜரி என இந்த பயங்கள் ஏதுமில்லாமல் நாங்கள் குறைக்க உதவுகிறோம்.
நீங்கள் எந்த ட்ரீட்மெண்டும் பண்ணத் தேவையில்லை. அதாவது ஜிம் போனால் அங்கு ஒர்க் அவுட் செய்ய வேண்டும். அதிலும் மூட்டு வலி, ஓவர் வெயிட் இருப்பவர்களால் இது சாத்தியமில்லை. சிலருக்கு உடலெல்லாம் நார்மலாக இருக்கும். தொப்பை மட்டும் குறைக்க வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது. ஆர்கானிக், மாடர்ன் மெத்தடிக் ட்ரீட்மெண்ட் என்ற முறையில் செய்து வருகிறோம். நான் இந்த சிகிச்சையை துபாயில் எடுத்தேன். அங்கு ரொம்ப ஸ்ட்ரிட். நம்ம ஊர் மாதிரி யார் எது வேண்டுமானாலும் செய்ய முடியாது.
அதனையே இங்கு சென்னையில் இம்லிமெண்ட் செய்திருக்கிறேன். நிறைய பேர் உடல் எடையை குறைக்க டயட் எடுத்து மேலும் பலவீனமாகிறார்கள். ஆனால், இங்கு மூன்று வேலையென்ன நான்கு வேலைக் கூட சாப்பிடலாம். ஸ்கின் அன் ஈவன் கலர் டோன், முகப்பரு, குழி குழியாக இருப்பதை சரி செய்கிறோம். அதே போல் தலைமுடிக்கும். பி.ஆர்.பி என்ற அட்வான்ஸ் ட்ரீட் மெண்ட் செய்து வருகிறோம். குழந்தை பெற்ற பிறகு பெண்கள் உடனே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். உடல் எடை கூடுவதை தடுக்கலாம். மருத்துவர்கள், பிசியோ தெரபிஸ்ட், டயட்டீஷியன் என அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கிறோம்” என்றார்.
 கோ கிரீன்
1975ம் ஆண்டு பைசன் நிறுவனத்தை ஆரம்பித்தோம் என்று பேசத் துவங்கினார் நிர்வாக இயக்குனர் கே.டி.ஜேசுதாஸ். “எங் களது எல்லாம் க்ளீனிங் பொருட்கள். டாய்லெட் முதல் தரை வரை க்ளீனிங், டிஸ்வார்ஸ் ஜெல்-பார், சோப்பு ஆயில், வெள்ளை- கலர் பினாயல் என தென்னிந்தியா முழுவதும் மார்க்கெட் செய்கிறோம். முக்கியமாக தமிழகத்தில் எல்லா மால்களிலும், கடைகளிலும் எங்கள் பொருட்கள் கிடைக்கும்.
தற்போது நாங்கள் கெமிக்கல் இல்லாமல் ஹெர்பலுக்கு மாறி வருகிறோம். நீமோ Floor Cleaner-ல் வேப்பிலையை பயன்படுத்தி 100% ஹெர்பலால் தயாரித்திருக்கிறோம். தற்போது ஆர்கானிக் என்று பலர் விலை அதிகமாக விற்பதை பார்க்கிறோம். அந்த நிலை மாறவேண்டும். எல்லோரும் கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்த வேண்டும். டிஸ்வார்ஸ் ஜெல்லில் கெமிக்கல் இல்லாமல் கொண்டுவருவது சவால் நிறைந்தது. அதிலும் கொண்டுவருவதற்கு ஆராய்ச்சி செய்து வருகிறோம்” என்றார்.
அழகான வீடுகளை மேலும் அழகு சேர்க்கிறோம்
இந்தோனேசியா மற்றும் இண்டியன் டீக்வுட்களை பயன்படுத்தி சோஃபா, கட்டில், டைனிங் டேபில்கள் செய்து கொடுப்பது எங்களது சிறப்பு என்று கூறுகிறார் அபி இம்போர்ட்ஸ் & எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.லட்சுமணசுவாமி. மேலும் இதுபற்றி பேசும் போது, “ஜெனியூன் லெதர் ரெக்ன்ஸை நாம் பயன்படுத்துகிறோம். இந்த பொருட்கள் மெஷினரியாலும், மேன்வலாகவும் செய்து வருகிறோம். தரம், விலை, சர்வீஸ் இதை யாராலும் எங்களை பீட் செய்ய முடியாது. நல்லா தூங்கி ஓய்வெடுத்தாலே எந்த ஒரு பிரச்சினையும் வராது. அப்படி இருக்கக் கூடிய பொருட்களே நம்மிடம் இருக்கிறது. வீடு மற்றும் அலுவலகத்திற்குத் தேவையான 1500 வகை டிசைன்களில் பர்னிச்சர்ஸ் இருக்கிறது. கஸ்டமைஸ் பர்னிச்சரும் செய்து கொடுக்கிறோம்” என்றார்.
எல்லாவற்றிற்கும் நம்மிடமே மருந்து இருக்கிறது
அகத்தியர் பிரணவ பீடம் என்ற அமைப்பு மூலம் பல சமூக சேவைகள் செய்து வருவதோடு, பரம்பரையாக நம் பாரம்பரிய முறையில் மருத்துவம் செய்துவரும் இதன் தலைவர் எம்.வெங்கடாசலம் தங்கள் நிறுவனம் பற்றி கூறுகையில், “மாலை 5-6 மணி வரை இலவசமாக ஆரூடம் சொல்லி வருகிறேன். வரும் காலத்தில் 1005 படுக்கை வசதி கொண்ட இலவச மருத்துவமனை, அதில் குழந்தை இல்லாத இந்தியத் தம்பதியர்களுக்கு இலவசமாக தங்கி குழந்தை பெற வசதி செய்ய திட்டமிட்டுள்ளோம். அகத்தியர், ஔவையார், 18 சித்தர்களுக்குக் கோயில்கள் கட்டுவதோடு ஆயுர்வேத கல்லூரியும் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இக்கண்காட்சியில், யாருமே பார்த்திராத ஒரு முகம், 21, 4, 5 முகம் என ருத்ராட்ச மாலைகள் வைத்திருக்கிறோம். வாங்கிய விலையில் 10% லாபம் வைத்து விற்கிறோம். பழங்காலத்து அரியவகை கற்களையும் டிஸ்பிலேயில் வைத்திருக்கிறோம்” என்றார். இதனோடு வியூட்ரா என்ற உணவுப் பொருள் பற்றி மருத்துவர் கண்ணன் கூறும் போது, ‘‘ஸ்டெம்செல் தெரப்பியால் உருவாக்கப்படும் இந்த ஹெர்பல் புராடக்ட் பஞ்சாபில் தயாராகிறது. நமது முன்னோர்கள் குழந்தை பிறந்த உடன் தொப்புள் கொடியை தாயத்தில் வைத்து பத்திரமாக பாதுகாத்தார்கள்.

முற்றிய நிலையில் இருக்கும் நோய்களுக்கு இதை அரைத்து கொடுக்கும் போது அது சரியாகிவிடும். தற்போது அதையே ஸ்டெம்செல் பேங்க் என்று பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஸ்டெம்செல்லுக்கு அவ்வளவு மகத்துவம். இதைப் போன்று ஒன்பது வகையான உணவுப்பொருட்களின் ஸ்டெம்செல்லில் இருந்து எடுத்து வியூட்ராவை தயாரித்துள்ளனர். இதனால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஏற்படும் அத்தனை வியாதிகளும் குணமாகும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இது அருமருந்து” என்றார்.
-அன்னம் அரசு
|