நீராலானது இவ்வுலகு



வெப்பத்தை எதிர்கொள்வோம்

மே மாதம் என்னும் போது, விடுமுறையும், புதிய பயணங்களும் நம் நினைவிற்கு வருகின்றன. புவி வெப்பமாகி வரும்  நிலையில், மே மாதங்கள் நமக்கு இனி வெப்பம் மிகுந்த காலமாக இருக்க போகின்றன என பல ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. வெப்பம் தனித்துவமான சமூக பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. வரும் மே மாதம் அதிக  வெப்பம் உள்ள மாதமாக இருக்கலாம். வெப்ப அலைகளை நமக்கு கொண்டு வரலாம் என்று இந்திய வானிலை ஆய்வு  மையம் தெரிவிக்கின்றது.

கடந்த காலங்களில் வெப்ப அலை காரணமாக பலர் இறந்துள்ளனர்.  குறிப்பாக, 1998ம் ஆண்டு 3000 ேபரும், 2002ம்  ஆண்டு 2000 ேபரும் வெப்ப அலை காரணமாக இந்தியாவில் இறந்துள்ளனர். இப்படியான நிகழ்வுகள் காலநிலை  மாற்றத்திற்கு பின்பாகத்தான் நிகழ துவங்கியுள்ளன. இயற்கையின் இந்த கொடுரத் தன்மையை நம்மால் தடுத்துவிட  முடியாது. ஆனால் பாதிப்புகளை குறைக்க முடியும். அதற்கு அதிகரித்து வரும் வெப்பநிலையை புரிந்து கொள்ள  வேண்டும். பின்பு அதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள தேவையானவற்றை நாம் செயல்படுத்த வேண்டும். இப்படி  வெப்பத்தை எதர்கொள்ள தயாராகுவோம்.

பூமியின் வெப்பநிலை

வெப்பநிலை (Temperature) என்பது ஒரு இயற்கையின் இயற்பியல் இயல்பு. சூரியனில் இருந்து அனுப்பப்படும்  “வெப்பம்” என்னும் மதன அம்புகள், குளிர்ந்திருக்கும் பூமியை காதல் கொள்ள செய்து, கசந்து உருகி, பலவித  இயற்பியல், வேதியல் மாற்றங்களை நிகழ்த்தி ஒரு நிலையை வந்தடைகிறது. பூமிக்கான தட்பவெப்ப சமன்பாடாக  மாறுகிறது. இந்த சமன்பாடு அன்றாட நிகழ்வாகவும் தொடர் நிகழ்வாகவும் இருக்கிறது. இந்த வெப்பநிலை சமன்பாடு  சீரான நிலையில் இருக்கின்ற போது தான் பூமி தன்னுடைய இயல்புதன்மையில் இருக்கும். பூமி இந்த இயல்பு  தன்மையில் இருக்கின்ற போது தான் மனித சமூகம் மற்றும் பிற உயிரினங்கள் வாழும் சூழல் இருக்கும்.

வெப்பநிலை அதிகரித்தால் பூமியின்  இயக்க சக்தியும் அதிகரிக்கும். உதாரணமாக பனிக்கட்டியில்  உள்ள நீர்  மூலக்கூறுகள் இயற்கையாக அதிர்வடைதல் என்பது மிகவும் குறைவான வகையில் நிகழ கூடியது. வெப்பநிலை  அதிகரிக்கும் போது பனிக்கட்டியில் உள்ள நீர் மூலக்கூறுகள் அதிர்வடைய ஆரம்பிக்கின்றன. வெப்பநிலை 273.15 K ஐத்  தாண்டும் போது பனிக்கட்டி நீராக மாறி விடும். திரவ நிலையில் நீர் மூலக்கூறுகள் கட்டுப்பாடின்றி அசையலாம்:  அதாவது வெப்பநிலை அதிகரித்ததால் நீரின் இயக்க சக்தி அதிகரித்துள்ளது.

நீரினை அதன் கொதிநிலைக்கு (373.15 K) வெப்பமாக்கினால் நீர் நீராவியாக மாறும். நீராவி நிலையில் நீரின் இயக்க  சக்தி மேலும் அதிகமாகும். இது போல திட நிலைக்குள்ளும் வெப்பநிலைக்கேற்றபடி இயக்க சக்தி வேறுபாடு உள்ளது.  அதிக வெப்பநிலையில் திடப் பொருட்களிலுள்ள மூலக்கூறுகள் அதிகளவில் அதிர்வடையும். குறைந்த வெப்பநிலையில்  இயக்க சக்தி குறைவென்பதால் மூலக் கூறுகள்/ அணுக்கள் குறைவாக அதிர்வடையும். இப்படி நம் உலகில் உள்ள  எல்லா பொருட்களும் வெப்பதன்மைக்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடியது. மனித இனம் எல்லா உயிரினங்களும் வெப்ப  நிலைக்கு ஏற்ப மாறக்கூடியது. வெப்ப நிலையோடு வாழ கூடியவையும் கூட. மனித உடலில் வெப்பம்

மனித உடலில் வெப்பம் உள்ளது.  மனித உடலில் வெப்பம் சீரான நிலையில் உள்ள போது மட்டுமே மனிதன்  ஆரோக்கியமாக இயங்க முடியும். மனித உடலின் வெப்ப நிலை சரியான அளவில் இருந்தால் மட்டுமே உணவு  செரிக்கும். விந்தணுக்கள் உருவாகும். கரு உருவாகும். இப்படி உடலின் வெப்ப நிலை பல முக்கிய செயல்பாடுகளை  செய்து வருகிறது.

உடலின் வெப்ப நிலைக்கும், புவியின் வெப்ப நிலைக்கும் தொடர்பு உள்ளது. புவியின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப நம்  உடலின் வெப்ப நிலையும் மாற்றம் அடையும். இன்னும் சொல்லப்போனால் புவியின் வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றம்  செய்து கொள்ள தக்களவில் நம் உடல் தாமே செயல்படும். உடலின் வெப்பநிலைக்கும் சுற்றுச்சூழலில் உள்ள  வெப்பநிலைக்கும் வேறுபாடு உருவாகின்ற போது, வேர்வை சுரப்பிகள் செயல்பட துவங்குகின்றன. வேர்வையாக நம்  உடலில் இருந்து நீர் வெளியேறுகிறது. இதன் மூலம் நம் உடலில் சமநிலை பாதுகாக்கப்படுகிறது.

நம் தோல் வெப்பத்திலிருந்தும், குளிர்ச்சியிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.  சூரியனின் வெப்பக் கதிர்கள்  தாக்கும்போது, நம் தோல்கள் கறுத்துக் கடினமாகி, வெப்பத்தை தாங்க கூடிய அளவில் தகவைத்துக் கொண்டு நம்மை  காக்கிறது. இதன் மூலம் உடலின் உள்பகுதி அதிக வெப்பமடைந்து விடாமல் கவனித்துக் கொள்கிறது. பூமியின் மத்திய  பகுதியில் தான் சூரியனின் வெப்ப தாக்குதல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பூமியின் மத்திய பகுதியில் உள்ள  மக்கள் கறுத்த தோலுடன் உள்ளனர். உண்மையில் வெள்ளை தோல் என்பது சத்து குறைவு என்பது வேறு கதை! வெப்ப அலையும் அதன் பாதிப்புகளும்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், அதிகபட்சமாக நிலவக் கூடிய வெப்பநிலையை வெப்ப அலை என்று  அழைக்கிறது. வழக்கமான கோடை நாட்களில் காணப்படும் வெப்பநிலையைவிட அதிகபட்சமாக  இந்த வெப்ப நிலை  இருக்கும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் வெப்ப அலை  நம்மை தாக்க கூடும்.வெப்ப அலையினால் நம் உடலில் பல பாதிப்புகள் உண்டாகக்கூடும்.  குறிப்பாக வெப்ப அலையின்  காரணமாக உயர்ந்துள்ள தட்பவெப்பம் நம் உடலின் நீர்சத்தை குறைக்க செய்யலாம். அதாவது உடலில் நீர்குறைந்து  வறட்சியை ஏற்படுத்தலாம். மேலும் நம்மை சோர்வடைய செய்யலாம். ஏன் சிலருக்கு மாரடைப்பை கூட ஏற்படுத்தலாம்.

சில நபர்களுக்கு வெப்ப அலையின் காரணமாக 102 டிகிரி வரையிலான காய்ச்சலுடன் எடிமா எனப்படும்  வீக்கமும்சின்கோப் எனப்படும் மயக்கமும் ஏற்படலாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறுகிறது.சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசை பிடிப்பு, வியர்வை போன்றவை அறிகுறிகளாக  தென்படும். 104 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல் அத்துடன் வலிப்பு, சித்தபிரமை, கோமா போன்றநோய்  தாக்கங்களையும் ஏற்படுத்த தக்கது வெப்ப அலைகள். இறுதியாக உயிரை காவு செய்யக் கூடிய அளவிலும் தாக்கம்  செலுத்தத்தக்கது

வெப்ப அலைகள். வயதானவர்கள், குழந்தைகள், உடல் பலவீனமானவர்களை அதிகம் பாதிக்கவல்லது வெப்ப அலைகள்.  வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாக்க நீரை தவிர வேறு வழி இல்லை. உடலின் வெப்ப அளவை சரியான  அளவில் பாதுகாக்க நீரால் மட்டுமே முடியும். இதற்கான அளவில் நம்மை உடலின் நீர் அளவை நாம் பாதுகாக்க  வேண்டியுள்ளது. கோடை காலங்களில் நீர், மோர் அதிகம் பருக நம் முன்னோர்கள் கூறியுள்ளதை நாம் அறிவோம். நீர்  காய்களையும், பழங்களையும் அதிகம் உண்ண வேண்டிய தேவையும் உள்ளது. இதோடு நீர் நிலை பாதுகாப்பும்  அவசியம்.
 
பூமியின் வெப்ப நிலையில் மாற்றம் நிகழ மனித சமூகம் இரண்டு வகையில் காரணமாக உள்ளது. முதலாவதாக  உற்பத்தி முறையில் அதிகளவில் பச்சை இல்ல வாயுகளை வெளியேற்றி பூமியை வெப்பமாக்கி வருகின்றனர்.  இரண்டாவதாக பல கட்டுமானங்களை உருவாக்கி, நகரமயமாக்கி வருவதனால் Urban Heating Effect என்னும்  தன்மையை உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாகவும் பூமி வெப்பமாகி வருகிறது. இந்த இரண்டு நிலைகளையும்  நாம் நிறுத்த வேண்டியுள்ளது.  நீர் நிலைகளை அதிகம் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. உற்பத்தியில் மாற்றம்  வேண்டும் இவையே வெப்ப அலைகள் போன்ற இயற்கை நிகழ்வுகளை குறைக்கும்.

(நீரோடு செல்வோம்!)