உடல் குளிரட்டும்



வாசகர் பகுதி

* சப்பு கொட்டும் வகையில் தயிரில் பலவகை உணவுகளை செய்யலாம்.
* சுட்டெரிக்கும்  வெயிலில் களைப்பாக வீட்டுக்கு வருகிறீர்களா? தயிரை நன்கு கடைந்து அத்துடன்  சர்க்கரை,  சிட்டிகை உப்பு, பிடித்தமான பழத்துண்டுகள், இல்லையென்றால்  முளைக்கட்டிய பயறு வகையில் ஒன்றை சேர்த்து  சிறிதளவு ேதனும் கலந்து கொண்டு  பருகுங்கள். களைப்பு போய் புத்துணர்ச்சி ஏற்படும். இதை கோடைக்காலத்தில்   வளரும் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த காலை உணவாகவே தரலாம்.

* கெட்டி  தயிருடன் சாதம் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். சாப்பிடும் முன்  எடுத்து அதில் கைப்பிடியளவு  மாதுளை முத்துக்கள், விதையில்லா திராட்சை,  துருவிய கேரட் இவை சேர்த்து சாப்பிட சுவையோ சுவை.
* நான், சப்பாத்தி தயாரிக்கும் போது தயிரை மாவில் கலந்து பிசைந்து கொண்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
* பிரியாணி செய்யும்போது தண்ணீருடன் தயிரையும் சேர்த்தால் மணம், சுவை கூடும்.
* விரதம்  இருப்பவர்கள் கெட்டி தயிரில் ஜவ்வரிசியை ஊறவைத்து அதில் கடுகு,  
பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு
சேர்த்து சாப்பிட்டால்  ருசியாக இருக்கும்.
* வெள்ளரிக்காய், ஊறவைத்த பயத்தம்பருப்பு, தக்காளி,  புதினா, கொத்தமல்லித்தழை, பூந்தி இவற்றை தயிரில் கலந்து  ‘சாலட்’ஆக  சாப்பிட்டால்
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

- வத்சலா சதாசிவன்,
சிட்லபாக்கம்.