எது ரைட் சாய்ஸ்?



வாஷிங்   மெஷின்

கிர்த்திகா தரன்

தேவைகள்தான் கண்டுபிடிப்புகளின் தாய் (Necessity is the mother of Invention) என்பார்கள். மனித நாகரிகம் கண்டுபிடிப்புகளின் பின்னால் பயணப்படத் தொடங்கியபோது, வாழ்க்கையையே மாற்றியமைக்கும் மந்திர வித்தைகள் செய்தான் மனிதன். எவையெல்லாம் வாழ்க்கைக்கு உபயோகமாக இருந்து வந்தனவோ, அவையெல்லாம் நவீன அறிவியலில் வடிவம் மாறி வசதியைத் தந்து, மனிதனுக்கு வசதியையும் ஓய்வையும் தரத் தொடங்கிவிட்டன. உதாரணமாக அம்மியும் மாவரைக்கும் கல்லும் இடம்பெயர்ந்து மிக்ஸியும் கிரைண்டரும் இடம்பிடித்துக் கொண்டன. உங்களுக்குப் பயன்படும் பொருட்கள் பற்றி எல்லாமும் சொல்லப்போகும் முழுமையான வழிகாட்டி இது!

சந்தோஷமா ஒரு வாரம் வெளியூரு போய் சுத்திட்டு வந்து சூட்கேஸ்ல இருக்கிற துணியெல்லாம் வெளில எடுத்துப்போட்டு பார்த்தால்தானே தெரியுது... மனசுக்குள்ள கேள்வி வேற... இம்புட்டு துணியும் நாமளா போடறோம்?அந்தக் காலத்துல இலைதழையோட இருந்தவங்களை நினைச்சா பொறாமையா வருது... துணியே தொவைச்சி இருக்க மாட்டாங்க இல்ல? மந்தாரை இலை ஸ்கர்ட், வாழை இலை வேட்டி, மாவிலை கோர்த்து கச்சை... பனை ஓலையில் கால்சட்டை... இயற்கையே எத்தனை டிசைன் கொடுத்து இருக்கு? யூஸ் அன்ட்த்ரோடெக்னாலஜியை அழித்த அந்த முதல் நெசவாளி மேல் கொஞ்சம் கோபம் கூட வருது!
 
ஆற்றங்கரைகளில்தான் நாகரிகங்கள் தோன்றினவாம்... முதல்ல ஆற்றோரங்களில் மக்கள் வாழ்ந்தாங்க. அங்கயே அலசிப் போட்டு பிழிஞ்சுப்பாங்க...  அடுத்து அழுக்கு இருந்தா கல்லுல அடிச்சு கசக்க ஆரம்பிச்சாங்க. இப்போ வரை அது தொடருது. அடுத்து கட்டையை வச்சு அடிச்சாங்க. சிலர் பெரிய கூடைல போட்டு ஊற வச்சு, மிதி மிதின்னு மிதிச்சு துவைக்கும் வழக்கமும் வந்துச்சு. இப்படித்தான் வீட்டு ஆளுங்களை துவைச்சு பிழியற வரலாறு ஆரம்பிச்சுதா என்று கேட்டா நான் பதில் சொல்ல மாட்டேன்!   வெள்ளாவியை வச்சி இட்லி அவிச்சதுக்கு அப்புறம் வெள்ளாவி ஐடியா எக்குத்தப்பா யாருக்கோ ஆரம்பிக்க, அங்க தொடங்கி நாம சினிமா பாட்டுக்கு கூட அந்த ஐடியாவை எடுத்துகிட்டோம்.

அப்புறம் ஆற்றை விட்டு நகர நகர துணியை சுத்தம் செய்ய நிறைய வழிகளை யோசிச்சாங்க... நடுவுல ஒரு புண்ணியவான் சோப்பு கண்டுபிடிக்க, அப்ப சோப்பு போட ஆரம்பிச்ச மனுஷன் இன்னிக்கும் நிறுத்தல. துணிக்கு மட்டும்னு எடுத்துக்கங்க...நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்! அப்படியே சோப்புத்தூள், சவுக்கார கட்டி , ப்ளீச், சாஃப்ட்னர் இன்னும் எத்தனையோ... தினம் ஒன்றாகக் களத்தில் இறங்கிக் கொண்டே இருக்கு. இப்பல்லாம் துணி துவைக்கிற செலவுக்கு பழையபடி ஆற்றுக்குப் போய் துவைக்கலாம் என்றால் ஆறே அழுக்கா ஓடுது. சரி, துவைக்க என்ன தீர்வுன்னு பார்த்து ஒரு ஆள் சைக்கிள் பெடல் மூலம் டிரம்ைம சுத்த வச்சு துவைக்க ஒரு ஐடியா செய்தான். அன்னிக்குத்தான் முதல் வாஷிங் மெஷின் பிறந்துச்சு!

எத்தனையோ வருஷமாச்சு கண்டு பிடிச்சு. இன்னும் நம்ம வீட்டுக்கு வரலேன்னு நான் மூக்கு சிந்த, நம்ம வீட்டு ஆள் கர்ச்சீப் எடுத்துக் கொடுத்துட்டு ‘அம்மாடி ஆரம்பிச்சிடாதே... நீதான் ஒரு சட்டை அழுக்கை கூட அலசி ஆராய்ந்து, பீராய்ந்து பீஸ் பீஸ் ஆக்குவியே... நீயே ஒரு வாஷிங் மெஷின் பார்த்து நல்லதா சொல்லே’ன்னு வீட்டுல சொல்ல களத்தில் இறங்கிட்டேன். ‘நீ சரியா வாங்கிட்டா துவைக்கிறது என் பொறுப்பு’ன்னு சொல்ல, சவாலா எடுத்துகிட்டேன். ஒரு குடும்ப ஸ்திரீ சிறந்த இஸ்திரியா புகழ்பெற்ற ஹிஸ்டரிய தெரிஞ்சுக்க வேணாம் நீங்க? வாங்க அந்த கதைய உங்களுக்கும் சொல்றேன்!

ஆத்தாடி தல சுத்துது... செமி ஆட்டோமேட்டிக்காம், முழு ஆட்டோமேட்டிக்காம், டாப் லோடு, ஃபிரன்ட் லோடு, ட்ரையர் சேர்த்து, தனியா ட்ரையர்னு, தானே டிரம் ஓடுதுன்னு ஒரு ஆள், இன்னொருத்தர் குழந்தை கூட பக்கத்துல தூங்கும்னு கைய பிடிச்சு இழுக்க, இன்னொரு கம்பெனி நாங்கதான் உலகத்துக்கே மெஷின் விக்கிறோம், ரொம்ப நம்பகம் என்று சொல்ல, அடுத்து இன்னொரு ஆள் பபிள் வாஷ்னு நுரை நிறைய வரும் என்று சொல்ல... நமக்கு நாக்கு நுரை தள்ளுது, எதை எடுக்க எதை விட என்று. எனவே, வழக்கம் போல அலசி ஆராய களத்தில் இறங்கிட்டா இந்தஅஞ்சல... என்னமோ டாப் லோடை பார்த்தா தலைய திறக்கிறது போலவும், ஃபிரன்ட் லோடை பார்த்தா வயிற்றை திறப்பது போலவும் தோணுதே. என்ன டிசைன் இதெல்லாம்? எப்படி தேர்வு செய்றது நாம? சரி... இப்ப எனக்கு என்ன வேணும்னு யோசிக்கணும். முதல்ல என்ன இருக்குன்னு விவரம் தெரியணும் இல்ல.

செமி ஆட்டோமேட்டிக்கா இல்ல முழு ஆட்டோமேட்டிக்கான்னு தீர்மானம் செய்யணும். அதுல ரெண்டு டிரம் இருக்கும். துணியை நாம்தான் எடுத்துப் போடணும். தண்ணி ஊற்றணும். சில வேலைகள் செய்யணும். நேரம் செலவழிக்கணும். பெரிய அளவுல இருக்கும். ஆனால், விலை குறைவு. முதல்ல பட்ஜெட். எத்தனை ரூபாய்ல வாங்கலாம். அதுக்குள்ள உள்ள மாடல்கள் மட்டும் பார்க்கணும். 3,800 ரூபாயில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்குது. காசு இருக்குன்னு 80 ஆயிரம் ரூபாய்க்கும் வாங்க முடியாது. என்ன தேவைன்னு பார்க்கணும் இல்ல.வீட்டுல தண்ணி நல்லா வருதா? நாம தண்ணியைப் பிடிச்சுக் கொட்டணுமா? இல்ல நேரா நேரத்துக்கு மட்டும்தான்வருமா? தண்ணி தொடர்ந்து வந்தா மட்டுமே ஃபிரன்ட் லோடு வாங்கணும். இல்லாட்டி டாப் லோடுதான் நல்லது. அடுத்து எத்தனை பேரு வீட்டுல? இரண்டு பேர் இருக்கிற வீட்டுக்கு 7 கிலோ மெஷின் தேவையான்னு யோசிக்கணும்.

8 பேர் வீட்டுல இருந்தா கொஞ்சம் கொஞ்சமா துவைக்க முடியாது. மெஷினுக்கு கெபாசிட்டி பார்க்க ஆரம்பிச்சோம். மனுஷனோடு துணி தோய்க்கிற கெபாசிட்டி அவுட். உதாரணமா குழந்தைகள் இருக்கும் வீட்டில் மூன்று, நான்கு நபர்கள் என்றாலும் துணி அதிகமா இருக்கும் . அட்டவணையை பாருங்க...

துணி துவைக்கும் கால இடைவெளி    நபர்களின் எண்ணிக்கை  குடும்பஇயந்திரக் கொள்ளளவு
   
வாரம் மூன்று                                    2                              3 Kgs
                                                                     4                              4 to 6 Kgs
                                                                     6                              7 to 8 Kgs
                                                                   >8                               >8

வாரம் இரு முறை                                                     2                               4 to 6 kgs
                                                                     4                                >6 kgs
                                                                     6                                >8 kgs
                                                                    >8                                 >8 kgs


வாரம் ஒரு முறை மட்டுமே துவைக்க இயலும் என்பவர்கள் பெரிய அளவில் வாங்கிக் கொள்வது நல்லது. எடுத்துக்காட்டாக ஒரு டீ-ஷர்ட் சராசரியா கால் கிலோ இருக்கும். ஜீன்ஸ் முக்கால் கிலோ. சட்டை கால் முதல் அரை கிலோ வரை. டபுள் பெட்ஷீட் முக்கால் கிலோ. காட்டன் சாரி அரை கிலோ. பெரிய பூத்துவாலை அரை முதல் முக்கால் கிலோ. எடுத்துக்காட்டா 6 கிலோ மெஷின் என்றால் நாலு பனியன், ஒரு பெட்ஷீட்,  இரண்டு ஜீன்ஸ், புடவை இரண்டு, பெரிய துண்டு மூன்று பிறகு சிறு உடைகள் மற்றும் கர்சீப் வகையறாக்கள்... இவ்வளவுதான் போட முடியும்.அப்படியே இக்கால வாஷிங் மெஷின் மாடல்களை ஒரு ஒப்பீடு செய்வோம்!

விவரங்கள்    செமி ஆட்டோமேட்டிக்    டாப் லோடிங்     அஜிடேட்டர்டாப் லோடிங்    இம்பெல்லர்ஃபிரன்ட் லோடிங்

கொள்ளளவு           5.5 to 6 kg                    5.5 kg to 6 kg    5.5 kg to 11 kg                      5 kg to 11 kg

துவைக்கும் தரம்        நல்ல தரம்               நல்ல தரம்    இன்னும் நல்ல தரம்.    தரமாக இருக்கும்.

துவைக்கும் சுற்றுகள்
(wash cycle)                     வேகம்                வேகம்                அதி வேகம்                அதி வேகம்

 சுடு நீர் வசதி         இல்லை              சிலவற்றில்    குறிப்பிட்ட மாடல்களில்     எல்லா மாடல்களிலும்

அளவும்,இட
வசதியும்               நிறைய இடம் தேவை      குறைவான இடம்    குறைவான இடம்                 மற்றவற்றை விட

குறைவான இடம்
எடுத்துக் கொள்ளும்
எளிதில் நகர்த்தும்
வசதி              எளிதில் நகர்த்த முடியும்     எளிதில் நகர்த்த முடியும்    எளிதில் நகர்த்த முடியும்     கடினம்


தொடர்ந்த நீர்
இணைப்பு              தேவை இல்லை                         தேவை                        தேவை         நீரின் பாயும்
                                                                                                     வேகமும் முக்கியம்.

மின்சார
உபயோகம்               குறைவு                      சிறிது அதிகம்    அதிகம்
                                                                        (சில மாடல்கள் மிக அதிகம்)             மிக அதிகம்

வசதிகள் 
           
நேரம் குறைவாக  எடுத்துக்கொள்ளும்                
விலை குறைவு                     
துணியை நடுவில் எடுத்துப் போடும் வசதி
கையால் துவைப்பது போல தரம்

ஃபிரன்ட் லோடைவிட விலை குறைவு
எடை குறைவு
வேகம்
நடுவில் திறந்தும் துணி போடலாம்.   
நடுவில் கட்டை போன்ற அமைப்பு இல்லை.

இட வசதி உண்டு
கடினமாக
துவைத்தல் இல்லை.
இடைஞ்சல் இல்லை.
எளிதில் உபயோகிக்கும் வசதி
குனிந்து நிமிர தேவை இல்லை   
சுடு நீர் வசதி
தண்ணீர் சிக்கனம்
துணிகளை மென்மையாக கையாளும்.
நிறைய சுற்றுகள்
நல்ல முழுமையான துணி துவைத்தல்- சுற்றி சுற்றி மேலும் கீழும் வருவதால்.

குறைகள்
 
நடுவில் நாம் எடுத்துப் போட இருக்க வேண்டும். எர்த் சரியாக இல்லாவிடில் மெல்லிய ஷாக் இருக்கும்.
ஆட்டோமேட்டிக் வசதி இருக்காது. நாமே அனைத்தும் செய்ய வேண்டி இருக்கும்..
இடம் அதிகம்எடுத்துக் கொள்ளும்.   
நிறைய தண்ணீர் தேவை.
கடினமான துவைப்பு. எனவே மெல்லிய துணிகளை போட முடியாது.
கட்டை போன்ற அமைப்பு துணி போடும் பொழுது இடைஞ்சல், சுற்றிதான் போட வேண்டும்.
மேலே திறக்க வேண்டி இருப்பதால் சமையலறை கீழே வைக்க முடியாது.மூடிக்கும் சேர்ந்து இடம் தேவை.   
அஜிடேட்டரை விட தண்ணீர் அதிகம்எடுக்கும்.
டிரம் அசைவில் பேலன்ஸ் தவறுவதால் ஷட் டவுன் ஆகலாம்.
துணிகள் ஒன்றுக்கொன்று சுற்றி பின்னிக் கொள்ளும். உலர்த்தும் போது பிரித்து எடுக்க வேண்டியிருக்கும். விலை அதிகம்
நடுவில் திறக்கமுடியாது
நடுவில் துணி சேர்க்க முடியாது
ஒரே இடத்தில் மட்டுமே நிரந்தரமாக வைக்க முடியும். சரியான ப்ளம்பிங் இணைப்புடன் இடைவிடா நீர் இணைப்பு.
நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளும்.

அடுத்து பல்வேறு வசதிகள் பற்றி அறிமுகம். முதலில் செமி ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் பற்றி அறிவோம்.மிக எளிதான தொழில்நுட்பம். ஒரு இடத்தில் துவைக்கும் இடம். அஜிடேட்டர் சுத்துவதால் துணிகள் சுழன்று துவைக்கும் வசதி. அதை கையால் எடுத்துப் போட்டு உலர்த்தும் உருளையில் போட்டால் உலரும் வசதி. மோட்டார் பெல்ட் மூலம் சுழலும்.

மேலே கையால் சுழற்றி (Knob), நாமேஎத்தனை சுற்று வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ள முடியும். மேனுவல் எனப்படும் நாமே திருத்தம் செய்யும் வசதி இலகுவாக இருக்கும். அடுத்து அஜிடேட்டர் உள்ள வாஷிங் மெஷின் இதில் மேலே எலெக்ட்ரானிக் கன்ட்ரோலர்கள் இருக்கும். இதன் மூலம் துவைக்கும் நேரம்,  முறை எல்லாவற்றையும் செட் செய்து கொள்ள முடியும். கீழே உள்ள மோட்டார் மூலம் இயங்கும். பின் பக்கம் நீர் இணைப்புக்காக குழாய்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அடுத்து இம்பல்லர் உள்ள நவீன வாஷிங் மெஷின் இதில் துணி அதிகம் கொள்ளும். இடைஞ்சல் இருக்காது. எளிதில் போட எடுக்க முடியும். முந்தைய மாடலை விட இந்த மாடல்கள் நவீனமானவை.இன்னும் திறன் வாய்ந்தவை. மென்மையாகதுணிகளை துவைப்பவை.

அடுத்து ஃபிரன்ட் லோடிங்... இதில் டிரக்ட் டிரைவ் என்ற டெக்னாலஜி சமீபத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறது. கீழே மோட்டார் பெல்ட்டுக்கு பதிலாக  டிரம்மில் நேரடியாக மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். பெரும்பாலான வாஷிங் மெஷின் மிக எளிதான தொழில்  நுட்பத்தில் உள்ளது. மோட்டார் பெல்ட்டில் இணைக்கப்பட்டு டிரம் சுழலும். அதன் மூலம் துணிகள் துவைக்கப்படும். வெகு வேகமாக சுழலும் பொழுது நீர் பிழியப்படுகிறது. யாரும் உள்ளே உட்கார்ந்து பிழிந்து கொண்டு  இருக்க  மாட்டார்கள்! அதில் வெறும் சூடு காற்று செலுத்தப்படும்போது துணிகள் உலர்த்தப்படுகிறது. கேட்கும் போது வாஷ் சைக்கிள்,
ஆர்.பி.எம். என்று ஏதேதோ சொல்கிறார்கள். மிக எளிதான தொழில் நுட்பம்.நனைதல், துவைத்தல், அலசுதல், பிழிதல், உலர்த்தல்... இவ்ளோதான். ஆனால், ஒரே டிரம். அதுசுழலும். பின்பக்கம் உள்ளே வரும் இணைப்பும் வெளியே வரும் இணைப்புமாகஇரண்டும் இருக்கிறது. மைக்ரோ கன்ட்ரோலர் மூலம் தண்ணீர் அளவு, சுழலும் அளவு, வேகம், சுடுநீர் தட்பவெப்பம் எல்லாம் கட்டுப்படுத்தப்படும். எத்தனை பட்டன் இருந்தாலும் அடிப்படை இதுதான். இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கீழே உள்ள டிரெயின் பைப்பில் (துவைத்த கழிவுநீர்க்குழாய்) இருக்கும் குப்பைகளை அகற்றி அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். இந்த படங்கள் மூலம் கொஞ்சம் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். எனினும் ஒரு முறை. பின்பக்கம் இரண்டு நீர் குழாய்கள். உள்ளே நல்ல தண்ணீர் செல்ல ஒன்று, அழுக்கு நீர் வெளியேற்ற ஒன்று. பிறகு மோட்டார் மூலமாக சுழலும் டிரம். டிரம் ஆடாமல் இருக்க பாதுகாப்பு ஷாக் அப்சர்வர்கள். இது சரியாக இல்லாவிட்டால் வாஷிங்மெஷின்களுக்கு உயிர் வந்து ஓடி ஓடி வரும், வீடு முழுக்க. மிக வேகமாகச் சுழலும்போது ஆடாமல் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அடுத்து மேலே நீர் உள்ளே வரும்போது சோப்பைக் கரைத்துக் கொண்டு வரும் பிரீ வாஷ் எனப்படும் அதிகப்படி துவைக்க சோப்புத்தூள் போட இன்னொரு இடம் இருக்கும்.

அடுத்து எெலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட். இதன் மூலம் சுற்றும் வேகம், நீர் வருவது, போவது, உலர்த்துவது என்று நேரப்படி அனைத்தையும் நிர்வகிக்கும். இதுதான் ஒரு மனிதன் செய்ய வேண்டியதை ஆட்டோமேட்டிக் ஆக அடுக்கு அடுக்காக செய்யும். அடுத்து இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள்...
சைல்ட் லாக்... இந்த வசதி இருக்கும்போது ஒரு முறை செட் செய்துவிட்டால் குழந்தைகள் நடுவில் திருகினாலும் பிரச்னை இல்லை. அது அப்படியே ஓடிக்கொண்டு இருக்கும்.

வாஷ் லோட் சென்சார்... அதிகப்படியான துணிகள் போட்டால் ஓடாது. பிழையை சுட்டிக்காட்டும். நவீன இயந்திரங்களில் இந்த வசதி உண்டு.
குயிக் வாஷ்... கொஞ்சமாக துணி போடும்போது வேகமாக 30 நிமிடங்களுக்குள் துவைத்துத் தந்து விடும்.ஃபஸ்ஸி லாஜிக்... துணியின் அளவை வைத்து தானே கணக்கிட்டுக் கொள்ளும். எத்தனை சோப்பு, நேரம், நீர் தேவை என்று முடிவு செய்துகொள்ளும்.டிலே ஸ்டார்ட் டைமர்... நாம் வெளியே சென்று விட்டு திரும்பும் நேரத்துக்கு ஏற்ப செட் செய்ய முடியும். இரவு அலுவலகம் விட்டு வரும்போது எடுத்து உலர்த்த தயாராக இருக்கும். காலையில் போட்டாலும், துணிகளில் ஈர வாசம் வராமல் வேண்டும் நேரத்துக்குத் துவைத்து தயாராக வைக்கும்.

ரேட் மேஷ்... எலிகள் ஏதும் மெஷின் உள்ளே போகாமல் தடுக்கும்.டிஜிட்டல் டிஸ்ப்ளே... சின்ன ஸ்க்ரீனில் எத்தனை நேரம், ஸ்பின், வாஷ் எல்லா
விவரங்களும் காட்டும்.பிரீ வாஷ் (pre wash)... அதிக அழுக்குள்ள துணிகளை தனியாக சோப்பு எடுத்துக்கொண்டு ஒரு முறை அதிகமாக
துவைக்கும் வசதி. எனர்ஜி சேவர்... இதற்கு ஸ்டார் நட்சத்திரம் கொடுத்து இருப்பார்கள். இதன் மூலம் 10 முதல் 50 சதவிகிதம் வரை மின்சார செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

RPM (Rotation Per Minute)...எடுத்துக்காட்டாக மிக மென்மையான துணிகளுக்கு ஐநூறுக்குள்ளே அளவு வைப்பதும் அழுத்தமான ஜீன்ஸ் போன்றவற்றுக்கு
ஆயிரத்துக்கும் மேல் அளவு வைப்பதும் நல்லது. இதன் அடிப்படையில் கன்ட் ரோலர் அமைத்துக்கொண்டு இயங்கும்.

டிலே ஸ்டார்ட் டைமர் இருந்தால் நாம் விரும்பும் நேரத்தில் இயங்கும்படி செட் செய்ய முடியும். அலுவலகம் விட்டு வரும்போது எடுத்து உலர்த்த தயாராக இருக்கும்!

எந்த மெஷின் என்றாலும் 11 வருடமே ஆயுள். வீட்டில் 8 வருட மெஷின் வீணாகி விட்டால், அதை ரிப்பேர் செய்வதை விட புதிது வாங்குவதே நல்லது. அல்லது ரிப்பேர் செலவு 50  சதவிகிதத்துக்கு மேல் இருந்தாலும் புதிது வாங்குவதே சிறந்த முடிவு.

(அடுத்த இதழில் முடிவெடுப்போம்!)