நாட் ஜுவல்ஸ் நாட் அவுட்!



சமிக்கியும் விதம் விதமான ஸ்டோன்ஸும் வைத்துத் தைத்து உடையணிந்த ஃபேஷன் மெல்ல மாறி வருகிறது. மாறாக குட்டிக் குட்டி மணிகள் கோர்த்த நகைகளை உடைகளில் வைத்துத் தைத்து அணிவதுதான் இன்று லேட்டஸ்ட். இந்த நாட் ஜுவல்ஸை சேலை, ஜாக்கெட், சுடிதார், துப்பட்டா என எதிலும் தைக்கலாம். நகைகள் செய்வதிலும்,
எம்பிராய்டரிங்கிலும் அனுபவமுள்ள சசிகலா, இன்று நாட் ஜுவல்ஸ் செய்வதில் பிஸி!

‘‘ஆரி ஒர்க், ஸர்தோசினு எம்பிராய்டரிங் வேலை பண்ணிட்டிருக்கேன். அந்த வேலைக்காக வர்றவங்க பலரும், ‘எம்பிராய்டரிங் பண்ணும் போது, கூடவே ஸ்லீவ்ல ஒரு மணி கோர்த்துடுங்க... ஜாக்கெட்ல கழுத்துப் பக்கம் குட்டியா ஒரு டாலர் மாதிரி வச்சுத் தச்சுடுங்க’னு சொல்ல ஆரம்பிச்சாங்க.  ஜுவல்லரி செய்யவும் தெரிஞ்சிருந்ததால, நாட் ஜுவல்லரி பண்றது எனக்கு சுலபமா இருந்தது. கடைகள்ல ரெடிமேடா நாட் ஜுவல்ஸ் கிடைக்குது. ஆனா, டிரெஸ்சுக்கு மேட்ச்சா அதே டிசைன்ல, கலர்ல கிடைக்குமாங்கிறது சந்தேகம். அதையே நாம செய்யக் கத்துக்கிட்டா, நம்ம டிரெஸ்ஸுக்கு பொருத்த மாவும் பண்ணிக்கலாம். செய்ய முடியாதவங்கக்கிட்ட ஆர்டர் எடுத்து பிசினஸாகவும் பண்ணலாம்’’ என்கிற சசிகலா, வெறும் 1,500 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைக் கையில் எடுக்கலாம் என உத்தரவாதம் தருகிறார்.

‘‘பிளாஸ்டிக் மணிகள், வளையம், கேப், கோல்டன் மணிகள், கியர் கம்பி, கயிறு, ஸ்டோன்ஸ், ஸ்டோன் ரிங், ஃபேன்சி சமிக்கி, கிரிஸ்டல், தாமரை கேப், குட்டிக்குட்டி இலைகள், சலுக்கு, கட்டர், சக்கரம், வெல்வெட், பட்டு அல்லது பளபள துணிகள்... இவ்வளவுதான் தேவை. மணிகள் சரம் கணக்குல கிடைக்கும். கிரிஸ்டலும், சமிக்கியும், இலைகளும் பாக்கெட் கணக்குல வாங்கலாம். அளவையும் தரத்தையும் பொறுத்து 25 ரூபாய்லேருந்து 150 ரூபாய் வரைக்கும் கிடைக்கும்.

 ஜாக்கெட்டுக்கு 2 செட் நாட் ஜுவல்ஸ் தேவைப்படும். சல்வாருக்கு கைகள், கழுத்துனு அவங்கவங்க விருப்பப்படி கேட்பாங்க. 1,500 ரூபாய் முதலீட்டுல 70 செட் பண்ணலாம். பிளாஸ்டிக் மணியில செய்த ஒரு செட் நாட் ஜுவல்ஸை 45 ரூபாய்க்கும் கிரிஸ்டல்னா 60 ரூபாய்க்கும் விற்கலாம். ஒரு நாளைக்கு 150 செட் பண்ணலாம். அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு செய்து கொடுத்து, அவங்க மூலமா ஆர்டர் பிடிக்கலாம். தையல் பொருட்கள் விற்கற கடைகள்ல சாம்பிள் காட்டி, ஆர்டர் வாங்கலாம். 75 முதல் 100 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற சசிகலாவிடம், ஒரு நாள் பயிற்சியில் 8 மாடல் நாட் ஜுவல்ஸை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். (99620 79337)

வெறும்
1,500 ரூபாய்
முதலீட்டில்
இந்தத்
தொழிலைக்
கையில்
எடுக்கலாம்!

குர்தீஸ் குட் குட்!

உடை விஷயத்தில் முற்றிலும் நவநாகரிகமாக மாற முடியாத, அதே நேரம் பழமைத் தோற்றத்திலிருந்தும் விடுபட விரும்புகிற பல பெண்களின் சாய்ஸ் குர்தீஸ். சுடிதாருக்கு மேல் டாப்ஸாகவும் அணிந்து கொள்ளலாம். ஜீன்ஸ் அணிகிற போது உணர்கிற சங்கடத்திலிருந்து விடுபடவும் அணியலாம். எந்த வயதினருக்கும் ஏற்ற உடை. தையல் தெரிந்தவர்கள் குர்தீஸ் தைத்து விற்பனை செய்தாலே உயரம் தொடலாம் என்கிறார் பூர்ணா.

‘‘பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சிட்டு, ஒரு பிபிஓவுல வேலை பார்த்திட்டிருந்தேன். பிராஜக்ட் முடிஞ்சதும் வேற வேலை தேட வேண்டி வந்தது. இன்னொரு வேலைக்குப் போறதைவிட, பிசினஸ் தொடங்கலாம்னு, ரெடிமேட் குர்தீஸ், சல்வார், புடவைகளை வாங்கி வித்திட்டிருந்தேன். தவிர, நான் வாங்கி வைக்கிற கலெக்ஷன்ஸ் வேற எங்கேயும் கிடைக்காத அளவுக்கு வித்தியாசமா இருக்கிறதா ஃப்ரெண்ட்ஸ் பாராட்டுவாங்க. எனக்கு டெய்லரிங் தெரியும்.

அந்தத் திறமையை ஏன் வீணாக்கணும்னு நானே குர்தீஸ் தச்சு விற்க ஆரம்பிச்சேன். வாங்கி வித்ததைவிட, நானே தச்ச மாடல்களுக்கு வரவேற்பு அதிகமா இருந்தது. கஸ்டமர்ஸ் எப்படிக் கேட்கறாங்களோ, அதுக்கேத்த மாதிரி தச்சுக் கொடுக்க முடியுது” என்கிற பூர்ணா ஒரு தையல் மெஷினும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மெட்டீரியலும் இருந்தால், இந்தத் தொழிலில் தைரியமாக இறங்கலாம் என நம்பிக் கைத் தருகிறார்.

‘‘சாதாரண மெஷின் போதும். காட்டன், சிந்தெடிக், பட்டுனு பலதரப்பட்ட மெட்டீரியல்கள் வேணும். ஒரு நாளைக்கு 5 குர்தீஸ் தைக்கலாம். மெட்டீரியலை யும் மாடலையும் பொறுத்து 250 ரூபாய்
லேருந்து 850 ரூபாய் வரைக்கும் விற்கலாம். வழக்கமா எல்லா கடைகள்லயும் கிடைக்கிற மாடல்களை தவிர்த்து, புதுசு, புதுசா டிசைன் பண்ணினா, ஆர்டர் அதிகமாகும். இ மெயில் மூலமா வாடிக்கையாளர்களுக்கு குர்தீஸ் மாடல் போட்டோவை அனுப்பியும் ஆர்டர் பிடிக்கலாம்.

திறமை இருக்கிறவங்க 40 சதவிகித லாபம் சம்பாதிக்கலாம்” என்கிற பூர்ணாவிடம் மொத்த விலையில் குர்தீஸை வாங்கியும் விற்கலாம். தைக்கக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு (தையல் தெரிந்தவர்களுக்கு) ஒரே நாள் பயிற்சியில் 3 மாடல் குர்தீஸை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார். (ணூ81220 22094)

தையல் தெரிந்தவர்கள் குர்தீஸ் தைத்து
விற்பனை செய்தாலே உயரம் தொடலாம்!

கொழுக்கட்டை மாடர்ன் ஸ்நாக்ஸ்!

எந்திர வாழ்க்கையில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. கூடவே பாரம்பரியமும்
பண்டிகைக் கால உணவுகளும்தான். பண்டிகை நாட்களிலும், குழந்தைகளுக்குப் பள்ளி முடிந்த பிறகான மாலை நேரங்களிலும் செய்து கொடுத்த பல சத்தான பலகாரங்கள் இன்று கிட்டத்தட்ட காணாமலே போய் விட்டன. அவை நட்சத்திர ஓட்டல்களிலும், சூப்பர் மார்க்கெட்டு களிலும் விற்பனைக்கு வைக்கப்படுகிற வித்தியாச உணவுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று கொழுக்கட்டை.

காணாமல் போய்க்கொண்டிருக்கிற பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், தன் குடியிருப்புவாசிகளுக்கு கொழுக்கட்டை செய்து கொடுக்கும் முயற்சியை ஆரம்பித்தவர் சீதாலட்சுமி. இன்று தனது குடியிருப்பைச் சுற்றியுள்ள சின்னச் சின்ன கடைகளுக்கும், மாலை நேரத்தில் ஆரோக்கிய ஸ்நாக்ஸ் கேட்கும் சில கம்பெனிகளுக்கும் விதம் விதமான கொழுக்கட்டைகள் தயாரித்து விற்பனை செய்கிறார்.

எந்திர வாழ்க்கையில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. கூடவே பாரம்பரியமும்
பண்டிகைக் கால உணவுகளும்தான். பண்டிகை நாட்களிலும், குழந்தைகளுக்குப் பள்ளி முடிந்த பிறகான மாலை நேரங்களிலும் செய்து கொடுத்த பல சத்தான பலகாரங்கள் இன்று கிட்டத்தட்ட காணாமலே போய் விட்டன. அவை நட்சத்திர ஓட்டல்களிலும், சூப்பர் மார்க்கெட்டு களிலும் விற்பனைக்கு வைக்கப்படுகிற வித்தியாச உணவுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று கொழுக்கட்டை.

காணாமல் போய்க்கொண்டிருக்கிற பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், தன் குடியிருப்புவாசிகளுக்கு கொழுக்கட்டை செய்து கொடுக்கும் முயற்சியை ஆரம்பித்தவர் சீதாலட்சுமி. இன்று தனது குடியிருப்பைச் சுற்றியுள்ள சின்னச் சின்ன கடைகளுக்கும், மாலை நேரத்தில் ஆரோக்கிய ஸ்நாக்ஸ் கேட்கும் சில கம்பெனிகளுக்கும் விதம் விதமான கொழுக்கட்டைகள் தயாரித்து விற்பனை செய்கிறார்.

நட்சத்திர
ஓட்டல்களிலும்
சூப்பர்
மார்க்கெட்டுகளிலும்
விற்பனைக்கு வைக்கப்
படுகிற வித்தியாச
உணவாக
மாறிவிட்டது
கொழுக்கட்டை!