ஸ்டைல் பிரியர்களுக்கான போன்



நவீன தொழில்நுட்பத்திலும் தரத்திலும் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் விலையிலும் கெடுபிடி காட்டாமல் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களைத் தான் மக்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் பிராண்ட் வேல்யூ என்பது இப்போது கொஞ்சம் நலிவடைந்து வருகிறது. அதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தரமான, மலிவான புரொடக்ட்டுகளைச் சந்தையில் கொண்டு வர போட்டி போடுகின்றன.

அந்த வகையில் 2020ம் வருடத்தில் தனது நிறுவனத்தின் முதல் போனை களமிறக்கியுள்ளது ‘ஓப்போ’. இந்த புது மாடலின் பெயர் ‘எஃப் 15’.
ஸ்டைல் அண்ட் டிசைனை விரும்புபவர்களைக் கவனத்தில் கொண்டு இந்தப் போனை வடிவமைத்திருக்கிறது ‘ஓப்போ’ நிறுவனம். தவிர, கேம் பிரியர்களுக்காக இதன் மென்பொருளை பூஸ்ட் செய்திருக்கிறார்கள்.

ஃபிங்கர் பிரின்ட் சென்சாருடன் 6.4 இன்ச்சில் AMOLED டிஸ்பிளே வித் ஃபுல் ஹெச்.டி ரெசல்யூசன், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், குவாட் கேமரா செட்-அப்பில் 48 எம்பியில் முதன்மை கேமரா, 8 எம்பியில் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பியில் டெப்த் கேமரா, இன்னொரு 2 எம்பியில் மேக்ரோ கேமரா என நான்கு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 16 எம்பியில் ஒரு கேமரா, விரைவில் சார்ஜ் ஆவதுடன், நீண்ட நேரம் சார்ஜ் நிற்க 4000mAh பேட்டரி திறன் என அசத்துகிறது இந்த போன். யூனிகார்ன் ஒயிட் மற்றும் மெல்லிய கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.19,990.