மூளைப் பாதை



தென்னாப்ரிக்க நாட்டின் தேசிய விடு தலைத் தலைவர் நெல்சன் மண்டலோவின் பிறந்த நாள் ஜூலை 19, 1918 ஆகும். 2009ம் ஆண்டு இவருடைய 91வது பிறந்த நாளில் இவர் ெபாது வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதன் 67வது ஆண்டு நிறைவு தினம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, ‘ஒவ்வொருவரும் 67 நிமிடங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கழிக்க வேண்டும்’ என்ற வழக்கம் தொடங்கப்பட்டது. அது இன்று வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

கி.பி. 69ல் நான்கு மன்னர்கள் (கல்பா, ஓத்தோ,  விட்டெலியஸ், வெஸ்பாஸியன்), கி.பி. 193ல் ஐந்து மன்னர்கள் (பெர்டினாக்ஸ், டிடியஸ் ஜூலியனஸ், பெஸ்செனியஸ் நைகர், க்ளோடியஸ் அல்பினஸ், செப்டிமஸ் செவரஸ்),  கி.பி. 238ல் ஆறு மன்னர்கள் (மேக்ஸிமஸ்த்ராக்ஸ், கோர்டியன் I, ப்யூபினஸ் II, டால்பினஸ், கோர்டியன் III) ரோமாபுரியை ஆண்டனர்.

வில்லியம் ஹஸ்கிஸ்ஸன் (1770-1830) என்பவர் 19ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த பிரிட்டிஷ் அரசியல்வாதி.  செப்டம்பர் 15, 1830 அன்று இவர் ஒரு முறை பிரதமரோடு லிவர்பூல் - மான்செஸ்டர் வரை செல்லும் ரயில் (ஸ்டீவன்ஸன்ஸ் ராக்கெட்) தொடக்க விழாவில் கலந்துகொண்டபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்தார். இவரே உலகில் ரயில் விபத்தில் இறந்த முதல் நபர் ஆவார்.

1845 முதல் 1963 வரை ஆக்ஸ்ேபார்டு மற்றும் கேம்பிரிட்ஜ் நகரங்களுக்கு இடையே செயல்பட்டு வந்த ரயில் பாதையினை மூளைப் பாதை (Brain Lane) என அழைத்தனர். இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இணைக்கிறது இந்தப் பாதை என்பதால் இந்தப் பெயர்!

1923ம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த ஃபிரெடரிக் பாண்டிஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஜான் மெக்னியாட் என இருவரும் இன்சுலினைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

துபாயில் உலகின் முதல் முப்பரிமாண அலுவலகக் கட்டிடத்தை 1,40,000 டாலர் செலவில் 17 நாட்களில் உருவாக்கி முடித்தார்கள். ஒரு பிரின்ட்டர் மூலம் பிரின்ட் எடுக்கப்பட்ட முதல் அலுவலகக் கட்டிடம் என்ற பெருமையை இது பெறுகிறது.ே

ஜ.பி. ஜெயரத்தினம் (1926-2008) என்ற தமிழரே, 1982ம் ஆண்டில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்றவர் ஆவார். இரண்டாம் உலகப் போரின்போது ஒழுக்கத்தை அறிவுறுத்துகின்ற சுவரொட்டிகள் பல நாடுகளில் ஒட்டப்பட்டன. போர் நிறைவுற்ற சூழலில் இவை முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டன.

2005ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த பழைய சுவரொட்டிகள் சில ஒரு புத்தகக் கடை யிலிருந்து கிடைத்தன. இவற்றில் ‘அமைதி காத்து முன்னேறு’ (Keep Calm and Carry On) என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பீட்டில்ஸ் பாடகர்களின் பாடல்கள் மிகவும் பிடித்தமானவை.

ஒரு இந்தியக் கறவை மாடு ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 1647 லிட்டர் பால் தருகிறது. இது உலகளவில் 2189 லிட்டராக உள்ளது. உலகத்தில் பாஸ்தா எனப்படும் இத்தாலிய உணவு வகைகளுக்காகவே பிரத்யேகமாக உள்ள உணவகங்களில் நியூயார்க்கில் உள்ள Rao’s (தொடக்கம் 1896) என்ற உணவகமே மிகப்பெரியது.

க.ரவீந்திரன்