பிளாஸ்டிக் மனிதன்



இத்தாலியின் மிலன் நகரில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு கண்காட்சி நடந்துவருகிறது. அதில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கலைப் பொருட்கள் மற்றும் வீட்டிலுள்ள பிளாஸ்டிக்கை வைத்து உருவாக்கப்பட்ட கலைப் பொருட்களைக்  காட்சிக்கு வைத்துள்ளனர்.
பியட் ஹெய்ன் ஏக் என்ற கலைஞர் கீபோர்டு, மவுஸ் உள்ளிட்ட  கம்ப்யூட்டரின் பிளாஸ்டிக் உதிரிப்பாகங்களைக் கொண்டு மனித உருவை உருவாக்கியுள் ளார். அந்த பிளாஸ்டிக் மனிதன் பலரின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த பெரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறான்.