காற்று மாசுபாடு ஏன் ஆபத்தானது?



ஏன்? எதற்கு? எப்படி?

இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு விஷயம் காற்று மாசுபாடு. இதனால் உலகம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தைப் பற்றி தினமும் செய்திகள் உலாவுகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் 2018-ம் வருடம் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் அசுத்தமான காற்று நம் ஆயுட்காலத்தில் சராசரியாக இருபது மாதங்கள் வரை பிடுங்கிக் கொள்கிறது.

உடல் பருமனால் ஏற்படும் தீங்குகளைவிட காற்று மாசுவால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் அதிகம். இதய நோய், சுவாசக் கோளாறுகள் முதல் புற்றுநோய் வரை பலவிதமான நோய்களுக்கு மூல காரணமாக இருப்பது காற்று மாசுபாடு தான்.

காற்று மாசு பெரியவர்களை விட குழந்தைகளைத் தான் அதிகமாக பாதிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோய்க்கும் முக்கிய காரணமாக இருக்கிறது காற்று மாசுபாடு. இவ்வளவு ஆபத்துகள் இருந்தபோதிலும் காற்று மாசுபாடு குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் தான் பல நாடுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.