சேவை



எகிப்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் செய்த காரியம் தான் இப்போது ஹாட் டாக். பொதுவாக ஏரியை, குளத்தைச் சுத்தம் செய்யும் தன்னார்வலர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், எகிப்திய தன்னார்வலர்களின் சேவை கொஞ்சம் வித்தியாசமானது. டைவிங் தெரிந்த தன்னார்வலர்கள் சிலர் கடலுக்குள் இறங்கி அங்கே குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியிருக்கின்றனர்.